மட்டன் குழம்பை மிஞ்சும் சுவையில் பட்டர் பீன்ஸ் குழம்பு.. ரெசிபி இதோ!
Butter Beans Kulambu : இந்த பதிவில் பட்டர் பீன்ஸ் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இன்று மதியம் வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன குழம்பு செய்து கொடுப்பது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் பட்டர் பீன்ஸ் விரும்பி சாப்பிடுவார்கள் என்றால், அதில் சூப்பராக குழம்பு செய்து கொடுங்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பட்டர் பீன்ஸ் குழம்பு சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது மிகவும் சுலபமான முறையில் செய்து விடலாம். இந்த குழம்பு செய்வதற்கு காய்கறிகள் ஏதும் தேவையில்லை. தக்காளி, வெங்காயம் இருந்தால் மட்டும் போதும், சூப்பராக செய்துவிடலாம். சரி வாங்க இப்போது இந்த பதிவில் பட்டர் பீன்ஸ் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: வீட்ல காய்கறி இல்லனா காராமணி குழம்பு செய்ங்க.. ருசியா இருக்கும்!
பட்டர் பீன்ஸ் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் :
பட்டர் பீன்ஸ் - 1 கப்
புளி சாறு - 1/3 கப்
தேங்காய் பால் - 1 கப்
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 3/4 ஸ்பூன்
குழம்பு பொடி - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1ஸ்பூன்
வெந்தயம் - அரை ஸ்பூன்
பூண்டு - 7
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
இதையும் படிங்க: கறிக்குழம்பு மிஞ்சும் சுவையில் வேர்க்கடலை குழம்பு.. ரெசிபி இதோ!
செய்முறை :
பட்டர் பீன்ஸ் குழம்பு செய்ய முதலில், பட்டர் பீன்ஸ் இன் தோலை உரித்து நன்கு கழுவிக்கொள்ளுங்கள் இப்போது ஒரு பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து கழுவி வைத்த பட்டர் பீன்ஸ், மஞ்சள் தூள், தேவையான உப்பு மற்றும் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மூன்று விசில் விட்டு இறக்கவும். இதனை தண்ணீர் உடன் சேர்த்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும் எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும். பிறகு அதில் வெங்காயம் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் அதில் பொடியாக நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும் தக்காளி நன்கு மசிந்தவுடன் அதில் கரமசாலா தூள், மிளகாய் தூள் குழம்பு பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன் பிறகு இதில் எடுத்து வைத்த அவிழ்த்து வைத்த பட்டர் பீன்ஸை தண்ணியுடன் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். ஓரளவு கெட்டியாக வந்ததும் அதில் கரைத்து வைத்த புளி சாற்றை சேர்க்கவும். அடுப்பை குறைவான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இதில் தேங்காய் பால் சேர்க்கவும். குழம்பிலிருந்து என்னைப் பிரிந்து வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலை தூவி விடுங்கள். அவ்வளவுதான் சுவையான பட்டர் பீன்ஸ் குழம்பு ரெடி. இந்த குழம்பு நீங்கள் சூடான சாதத்துடன் வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D