கறிக்குழம்பு மிஞ்சும் சுவையில் வேர்க்கடலை குழம்பு.. ரெசிபி இதோ!
Verkadalai Kulambu Recipe : ருசியான வேர்கடலை குழம்பை சுலபமாக செய்வது எப்படி என்று இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
வேர்க்கடலை சட்னி கேள்விப்பட்டீருப்பீர்கள். ஆனால் வேர்க்கடலையில் செய்யும் குழம்பு பற்றி தெரியுமா? மிகவும் எளிமையான ரெசிபிதான். ஆனால் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். வேர்க்கடலை பாதாம் அளவுக்கு சத்துக்கள் நிறைந்தது. இதனால் உடலுக்கு பல விதமான நன்மைகள் கிடைக்கின்றன. அதன் விலையும் மலிவானது.
வேர்க்கடலை குழம்பு செய்ய அதிக நேரமும் எடுக்காது. ஒருமுறை உங்கள் வீட்டில் வேர்க்கடலையில் குழம்பு செய்து எல்லோருக்கும் பரிமாறினால் மீண்டும் அந்த குழம்பு வேண்டும் என எல்லோரும் கேட்கத் தொடங்கிவிடுவார்கள். அப்படிப்பட்ட இந்த குழம்பை எளிமையான முறையில் எப்படி செய்யலாம் என வாங்க பார்க்கலாம்.
இதையும் படிங்க: வெறும் 10 நிமிடத்தில் ருசியான வெண்டைக்காய் மோர் குழம்பு.. ரெசிபி இதோ!
வேர்கடலை குழம்பு செய்ய தேவையான பொருள்கள்:
வேர்க்கடலை - 1/2 கப் (தோல் உரித்தது)
சீரகம் - 1/2 கப்
கடுகு - 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
சாம்பார் தூள் - 2 ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
அரைக்க வேண்டிய மசாலா :
தேங்காய் துருவல் - 1/4 கப்
மிளகு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பூண்டு - 2
இதையும் படிங்க: 2 தக்காளி போதும் டேஸ்டான சாம்பார் ரெடி.. ஒருமுறை செஞ்சு பாருங்க திரும்பத் திரும்ப செய்வீங்க!
செய்முறை :
வேர்கடலை குழம்பு செய்யும் முதலில் தோல் உரித்த வேர்க்கடலையை தண்ணீரில் சுமார் அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் வேர்க்கடலையை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேர்க்கடலை உடையாதவாறு நன்கு வேக வைத்து எடுக்கவும். இப்போது ஒரு மிக்ஸி ஜாரில், மிளகு சீரகம் பூண்டு தேங்காய் துருவல் ஆகியவற்றை போட்டு நன்கு மையா அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் கடுகு போட்டு தாளிக்கவும். பிறகு அதில் சீரகம், கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கி வைத்த தக்காளியையும் சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள் ஆகியவற்றை சேர்த்து அவற்றின் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். பின்னர் ஒரு கப் தண்ணீர் அதில் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு ஊற வைத்துள்ள புளியை கரைத்து குழம்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். குழம்பு நன்றாக கொதித்ததும் அதில் வேகவைத்த வேர்கடலையை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். தேவையானால் தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது அரைத்து வைத்துள்ள மசாலாவை இதனுடன் சேர்த்து நன்றாக கொதிக்க வையுங்கள். குழம்பு நன்றாக கெட்டியானதும் அதில் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் வேர்க்கடலை குழம்பு தயார். இந்த குழந்தை நீங்கள் சாதம் இட்லி தோசை ஆகியவற்றுடன் வைத்து சாப்பிடலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D