வெறும் 10 நிமிடத்தில் ருசியான வெண்டைக்காய் மோர் குழம்பு.. ரெசிபி இதோ!
Vendakkai Mor Kulambu Recipe : அனைவருக்கும் பிடித்த வெண்டைக்காய் மோர் குழம்பு செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
எப்போதும் மதியம் சாம்பார் புளிக்குழம்பு என்று சாப்பிட்டு போரடித்து விட்டதா? மிகவும் சுவையாக, கூடவே சத்தான ருசியில் ஏதாவது சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கான பதிவு தான் இது.
உங்கள் வீட்டில் வெண்டைக்காய் உள்ளதா? அப்படியானால், அதை வைத்து மோர் குழம்பு செய்து சாப்பிடுங்கள். வெண்டைக்காயில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. முக்கியமாக, இது கொலஸ்ட்ரால் பிரச்சினை, சர்க்கரை நோய், மலச்சிக்கல், புற்றுநோய், வயிற்றுப்புண், பார்வை குறைபாடு என பல்வேறு பிரச்சனைகளுக்கும் அருமருந்து. நீங்கள் எப்போதும், வெண்டைக்காயில் சாம்பார், பொரியல், கூட்டு செய்து தான் சாப்பிட்டு இருக்கிறீர்கள் என்றால், ஒரு முறை இந்த ரெசிபி செய்து பாருங்கள். இதன் சுவை ருசியாக இருக்கும். முக்கியமாக இந்த ரெசிபி செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது, மிகவும் சுலபமாக செய்துவிடலாம். ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ரெசிபி செய்து கொடுங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க. இப்போது இந்த கட்டுரையில் வெண்டைக்காய் மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதையும் படிங்க: ஐயர் வீட்டு மோர் குழம்பு... இனி நீங்களும் சுலபமாக செய்யலாம்.. ரெசிபி இதோ!
வெண்டைக்காய் மோர் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் - 50 கிராம் (நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 3
தயிர் - 2 கப்
பூண்டு - 3
பச்சை மிளகாய் - 2
துருவிய தேங்காய் - 1 கப்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸபூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: 10 நிமிடத்தில் சுவையான மோர் குழம்பு செய்ங்க.. ரெசிபி இதோ!
செய்முறை :
வெண்டைக்காய் மோர் குழம்பு செய்ய முதலில், ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்த வெண்டைக்காயை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், துருவிய தேங்காய், மஞ்சள் தூள், சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் அரைத்த இதனை தயிருடன் சேர்த்து நன்கு கலக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு, வதக்கிய வெண்டைக்காயை இதனுடன் சேர்த்து ஒருமுறை கிளறி விடுங்கள். இப்போது இந்த கலவையை தயாரித்து வைத்த தயிர் கலவையுடன் சேர்த்து ஒருமுறை கிளறி விடுங்கள். பிறகு அதை அடுப்பில் வைத்து ஒருமுறை கொதிக்க விடுங்கள். அவ்வளவுதான் ருசியான வெண்டைக்காய் மோர் குழம்பு ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D