எந்தெந்த பழங்களை சாப்பிட்டால் கர்ப்பகால மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்று இந்த பதிவில் காணலாம்.
கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றம் காரணமாக பெண்களின் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். மேலும் செரிமான அமைப்பும் பாதிக்கப்படும். இதன் காரணமாக கர்ப்பிணிகள் மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்க நேரிடும். இது தவிர வாயு, வயிற்று பிடிப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். ஆகவே கர்ப்பிணிகள் இந்த மாதிரியான பிரச்சனைகளை தவிர்க்க தங்களது வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகள் சில மாற்றங்களை செய்வது மிகவும் அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். எனவே, கர்ப்பகால மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைக்க எந்த மாதிரியான பழங்களை சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம்.
கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனை வர காரணங்கள் :
- கர்ப்ப காலத்தில் புரோஜெஸ்ட்டிரோன் இன்னும் ஹார்மோன் அதிகரிப்பின் காரணமாக செரிமான செயல்முறை குறைந்து விடுகிறது.
- கர்ப்ப காலத்தில் கர்ப்பப்பையின் அளவு அதிகரிக்கும் போது உடலில் அழுத்தம் ஏற்படும். இதன் விளைவாக செரிமான செயல்முறை பாதிக்கப்படும்.
- கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டாலும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும்.
- கர்ப்ப காலத்தில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை குறைவாக எடுத்துக் கொண்டாலும் மலச்சிக்கல் ஏற்படும்.
கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் வருவதை தடுக்க வழிகள் :
- கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.
- கர்ப்பிணிகள் நடைபயிற்சி மற்றும் யோகா செய்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கலாம்.
- முழு தானியங்கள், பச்சை இலை காய்கறிகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை கர்ப்பிணிகள் அதிகமாக சாப்பிட வேண்டும்.
- ஒரே சமயத்தில் அதிகமாக சாப்பிடுவதற்கு பதிலாக, சிறிதளவு சாப்பிடுங்கள்.
கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனையை போக்க உதவும் பழங்கள் :
1. ஆப்பிள் - பல உடல்நல பிரச்சினைகளுக்கு நன்மை பயக்கும் என்றாலும், இதில் இருக்கும் பெக்டின் குடல் இயக்கத்தை செயல்படுத்த பெரிதும் உதவும். ஆனால் தோலுடன் தான் ஆப்பிள் பழத்தை சாப்பிட வேண்டும்.
2. பேரிக்காய் - கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைக்க பேரிக்காய் சாப்பிடுவது நல்லது. பேரிக்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இது குடல் இயக்கத்தை சீராக வைக்க உதவும். மேலும் உடலில் நீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும்.
3. கொய்யா பழம் - கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனையை எதிர்கொண்டால் கொய்யாப்பழத்தை விதையுடன் சாப்பிடுங்கள். கொய்யாவில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்த பெரிதும் உதவும்.
4. கிவி - கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனையை போக்க கிவி பழத்தை தினமும் சாப்பிடுங்கள். இதில் இருக்கும் ஆஸ்டின்டின் என்ற நொதி உணவை எளிதில் ஜீரணிக்க உதவும்.
5. பிளம் - கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனையை எதிர்கொண்டால் நீங்கள் பழம் சாப்பிடுங்கள். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை செரிமானத்தை மேம்படுத்த உதவும். மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
