தீராத நோய்களையும் தீர்க்கும் கடுகு வைத்தியம்!
கடுகில் ஒளிந்திருக்கும் மருத்துவ நன்மைகளையும், வீட்டு வைத்திய குறிப்புகளையும் இங்கு காணலாம்.
வீட்டு சமையலில் பயன்படுத்தும் முக்கியமாக பயன்படுத்தும் கடுகில் பல மருத்துவ நன்மைகள் உள்ளன. முன்னோர் கூறும் திரிகடுகம் என்ற மூன்று மருத்துவ பொருட்களில் முதன்மையானது கடுகு. இதில் ஆற்றல் அதிகம் உள்ளது. 100 கிராம் கடுகில் கிட்டத்தட்ட 508 கலோரி ஆற்றல் இருக்கும். விரைவில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றல் மட்டுமின்றி உடல் எடையை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.
கடுகின் நன்மைகள்
கோடையில் உடலில் வரும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசலாம். கடுகு விதைகளில், உடலுக்கு தேவையான எண்ணெய் உள்ளது. இதனுடன் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் ஆகிய அத்தியாவசிய அமிலங்கள் காணப்படுகின்றன. கடுகில் உள்ள நொதிகளின் செயல்பாடு, நரம்பு மண்டல செயல்பாடு, வளர்ச்சிதை மாற்றத்தில் நல்ல பலன் தரும். போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் ஆகிய, பி- காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் அதில் நிறைந்து காணப்படுகின்றன.
நியாசின் (விட்டமின் பி-3) ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும். கடுகில் இருக்கும் கால்சியம் எலும்புகளை உறுதியாக்கும். தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம், ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன. இருமலை கட்டுப்படுத்தும். விஷத்தை முறிக்கும். செரிமான கோளாறுகளை சரிசெய்யும். ஒற்றை தலைவலியை போக்கும். விக்கலை கட்டுப்படுத்தும். பசியை தூண்டும்.
கடுகின் வீட்டு வைத்தியம்!
ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தேன் விட்டு, லேசாக வறுத்து தூளாக்கிய கடுகை சேர்த்து வெப்பப்படுத்தினால் இளகி வரும். இது சூடு ஆறியவுடன் சுண்டைக்காய் அளவுக்கு அதை எடுத்து உண்டு வந்தால் இருமல் கட்டுப்பாட்டுக்குள் வரும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
தொடர் விக்கல்..
- தொடர் விக்கலை சரி செய்ய கடுகு பொடியில் நீர் விட்டு, அதை மெல்லிய துணியில் வைத்து தொண்டைக்கு அருகே வைத்தால் விக்கல் நிற்கும்.
செரிமான கோளாறுகளை சரிசெய்யும். இதனை குறைந்த அளவுக்கே பயன்படுத்த வேண்டும். அதிகம் எடுத்தால் குமட்டல், வாந்தி ஏற்படும். பூச்சி, வண்டு கடி விஷத்தை முறிக்கும் தன்மை கடுகுக்கு உண்டு.
புளித்த ஏப்பமே...
- புளித்த ஏப்பம், வயிறு உப்புசத்துக்கான மருந்தாக கடுகு செயல்படும். இதற்கு கடுகு பொடி, சீரகப் பொடி, பூண்டு, இஞ்சி, பெருங்காயப் தூள், உப்பு ஆகியவற்றை கொண்டு மருந்து தயாரிக்கலாம். பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து அதில் 2 பல் பூண்டு தட்டி போட்டு கொள்ளுங்கள். இதனுடன் கொஞ்சம் இஞ்சி, கால் ஸ்பூன் சீரகத் தூள், கொஞ்சம் பெருங்காயம், கடுகுப் பொடி, 2 சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்கவிடுங்கள். இதை வடிகட்டி அருந்தினால் புளித்த ஏப்பம் குணமாகும். செரிமான கோளாறு, வயிறு உப்புசம் போன்ற நோய்கள் குணமாகும்.
ஒற்றை தலைவலி மருந்து...
கடுகு செடியை சிறுதுண்டுகளாக வெட்டி, அதில் தேவையான அளவு நீர்விட்டு கொதிக்க வையுங்கள். இதை வைத்து நீராவி பிடித்தால் ஒற்றை தலைவலி, தலைபாரம், இருமல், நெஞ்சக சளி, மூக்கடைப்பு போன்றவை குணமாகும்.
இதையும் படிங்க: மசாலா பொடி சீக்கிரமே வண்டு புடிச்சு கெட்டு போகுதா..? ரொம்ப நாள் பயன்படுத்த இதை மட்டும் பண்ணுங்க..
வறட்டு இருமல் குணமாக...
வறட்டு இருமல் குணமாக தேநீர் தயாரிக்கலாம். கால் தேக்கரண்டி கடுகு எடுத்து லேசாக வறுக்கவும். அதை தூளாக்கி ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வையுங்கள். இதனை வடிகட்டி தேன் கலந்து குடிப்பதால் சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி, கண்களில் நீர் வழிதல் ஆகிய பிரச்னைகள் மறைந்து போகும். இதனை 50 முதல் 100 மில்லி வரை அருந்தலாம்.
கடுகு காரமானது. உடலுக்கு வெப்பத்தை தரக்கூடியது. நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. காய்ச்சலை குணமாக்கி வலியை குறைக்கும். வீக்கத்தை கரைக்கும். கடுகு வைத்தியம் செய்து சில நோய்களில் இருந்து விடுபடுங்கள்.
இதையும் படிங்க: பல நோய்களுக்கு மருந்தாகும் வெங்காயத் தோல்.. இனி தூக்கி போடாதீங்க! இப்படி பயன்படுத்தினால் பலன் கிடைக்கும்!
- Beauty tips in Tamil
- FOOD RECIPES
- FOOD TIPS
- HEALTH TIPS
- HEALTHY FOOD
- HEALTHY FOOD TAMIL NEWS
- HEALTHY FOOD TIPS
- HEALTHY LIFE
- Health Tips in Tamil
- Health care in tamil Skin care tips in tamil
- Home Remedies
- Home Remedies for body pain
- LIFESTYLE
- Latest Lifestyle News
- Lifestyle News
- Lifestyle News Tamil
- Lifestyle News in Tamil
- Mustard seed benefits
- Mustard seed benefits in tamil
- Mustard seed home remedies
- TAMIL FOOD RECIPE
- home remedies of mustard seeds
- mustard seeds
- mustard seeds recipes