MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • மசாலா பொடி சீக்கிரமே வண்டு புடிச்சு கெட்டு போகுதா..? ரொம்ப நாள் பயன்படுத்த இதை மட்டும் பண்ணுங்க..

மசாலா பொடி சீக்கிரமே வண்டு புடிச்சு கெட்டு போகுதா..? ரொம்ப நாள் பயன்படுத்த இதை மட்டும் பண்ணுங்க..

மசாலா பொருள்களை வீணாகாமல் பயன்படுத்த தேவையான சில குறிப்புகளை இங்கு காணலாம். 

2 Min read
Author : maria pani
| Updated : Jan 26 2023, 11:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ்நாட்டை பொறுத்த வரை கார சாரமான உணவுகள் தான் பெரும்பாலானவர்களுக்கு விருப்பம். அதிலும் மசாலா பொருள்கள் இல்லாத உணவு வகைகளை காண்பது அரிது. சின்ன பொரியல் முதல் பிரியாணி வரை மசாலா தான் முதன்மை தேவை. ஆனால் சில நேரங்களில் மசாலா பொருள்கள் அவசரத்திற்கு திறந்து பார்க்கும்போது கெட்டி பிடித்து காணப்படும். அது ஏன்? எப்படி நீண்ட காலம் மசாலா பொருள்களை சேமிக்கலாம் என்பது குறித்து இங்கு காணலாம்.  மார்க்கெட்டில் பேக் செய்யப்பட்டு வாங்கும் மசாலா பொருட்களை அதில் குறிப்பிட்ட தேதி முடிந்த பிறகும் உபயோகம் செய்யலாம். அதில் தரம் குறையலாம், ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிய தீங்கு ஏற்பட வாய்ப்பில்லை. 

 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

எப்போது மசாலா பொருள்களை தூக்கி எறிய வேண்டும்? 

நாம் சேமித்து வைத்துள்ள மசாலாப் பொருட்கள் வழக்கத்திற்கு மாறான வாசனை வீசாமல் மாறினால் அதை பயன்படுத்தக் கூடாது. மசாலா பொருள்களை சேமித்துள்ள டப்பாக்கள் அல்லது கண்ணாடி பாட்டில்களில் பூச்சிகள் வந்தால் உடனே அதை அப்புறப்படுத்துங்கள். மசாலாக்களில் ஈரமோ, துர்நாற்றமோ வந்தாலும் அதன் காலம் முடிந்து விட்டது என புரிந்து கொள்ளலாம். 

35

மசாலா பொருள்களை சேமிக்க டிப்ஸ் 1... 

மசாலா பொருட்களின் அசல் தரம் மாறாமல் இருக்க நீங்கள் விரும்பினால், கடையில் இருந்து வாங்கி வந்த பாக்கெட் அல்லது பெட்டியில் மசாலாவை சேமிக்க வேண்டும். மசாலா பொருள்களை காற்றுபுகாமல் வைப்பதற்கு ஏற்ற பிளாஸ்டிக் கிளிப்புகளை (Plastic Food Snack Bag Pouch Clip) சூப்பர் மார்க்கெட்டிலும், ஆன்லைனிலும் கூட பெறலாம். 

டிப்ஸ் 2.. 

மசாலா பொருட்களை மாதம் ஒருமுறை வாங்கி பயன்படுத்தும் போது அதனுடைய தரம், வாசனை போன்றவற்றை தக்க வைக்கலாம். மொத்தமாக வாங்கி வைக்கும்போது தரம் மிக்கதாக இருக்காது. 

45

டிப்ஸ் 3

காற்றுபுகாத ஏர் டைட் கன்டெய்னர்கள், கண்ணாடி பாட்டில்களில் சேமிக்க வேண்டும். சமைக்கும்போது ஈரக் கைகளால் அவற்றை கையாளாமல் இருந்தால் போதும். 

டிப்ஸ் 4 

மசாலா பொருள்களை ஜன்னல் ஓரங்களிலோ, வெளிச்சம் படும் இடங்களிலோ, சூரிய ஒளிபடுமாறோ வைக்கக் கூடாது. மசாலா டப்பாக்களை வெளிச்சம் குறைவாகப்படும் இடங்களில், உலர்ந்த பகுதியில் வைத்தல் முக்கியம். 

55

காலக்கெடு.. 

அந்த நான்கு டிப்ஸுகளில் உங்களுக்கு நாம் பயன்படுத்தும் மசாலா, மூலிகை சார்ந்த பொருட்களுக்கு காலாவதி தேதி குறிப்பிட்டு சொல்ல முடியாது. கைபடாமல் பயன்படுத்தினால் நீண்டகாலம் வரும். ஆனால் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கும் மசாலா பொருட்களில் ‘எக்ஸ்பைரி டேட்’ கணக்குபடி உபயோகம் செய்ய வேண்டும். அந்த தேதிக்குள் மேல் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் மசாலா பொருட்களை பயன்படுத்துங்கள். அதன் பிறகு அவை பயன்படுத்த தகுதியவற்றை. அந்த தேதிக்கு பிறகு அதன் சுவை மாறும். அந்த காலக்கெடுக்குள் பயன்படுத்தாவிட்டால் தரமும் குறையலாம். ஆகவே குறிப்பிட்ட தேதிக்குள் அதனை உபயோகம் செய்வது நல்லது. 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MP
maria pani
சமையலறை குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Easy Shopping : உங்களுடைய ஷாப்பிங் சுமையை தூக்கிவர இனி ஆள் வச்சுக்கலாம்!
Recommended image2
பட்ஜெட் விலையில் மனைவிக்கு பரிசளிக்க 7 அழகான வெள்ளி மோதிர டிசைன்கள்!
Recommended image3
Most Expensive Plants: ஆத்தாடி ஒரு செடியின் விலை 25 லட்சமா! இந்தியாவின் டாப் 7 காஸ்ட்லி செடிகள் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved