ஏர்டெல் அதிரடி அறிவிப்பு..!  2 சூப்பர் சலுகையால் வாடிக்கையாளர்கள் குஷி..! 

தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 2 புதிய சலுகை அறிவித்து உள்ளது.

முதலாவதாக ஏர்டெல் நிறுவனம் அதன் 8 கோடிக்கும் மேற்பட்ட ப்ரீ-பெயிட் இணைப்புகளின் செல்லுபடியாகும் காலத்தை வருகிற ஏப்ரல் 17 வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.80 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் திட்டத்தில் கால அவகாசம் முடிந்து இருந்தால் அதனை வரும் ஏப்ரல் 17, 2020 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் தங்கள் ஏர்டெல் மொபைல் எண்களுக்கு வரும் இன்கம்மிங் அழைப்புகளை தொடர்ந்து பெறுவார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கூடுதல் சலுகையாக ரூ.10 மதிப்பிலான டாக் டைம் சேர்ப்பதாகவும் அறிவித்துள்ளது. இந்த சலுகை அடுத்த 48 மணி நேரத்தில் அவரவர்களுக்கு கிடைத்துவிடும்  எனவும் தெரிவித்து உள்ளது

இந்த சிறப்பு சலுகை எதற்காக என்றால், ஏற்கனவே ரீசார்ஜ் செய்யாதவர்களுக்கு இன்கமிங் கால் வசதி  ஏற்படுத்தப்பட்டு உள்ளது போல, அவசர காலத்திற்கு மற்றவர்களுக்கு கால் செய்ய வேண்டும் அல்லவா ? இது போன்ற சமயத்தில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது ஒருபக்கம் இருக்க....எஸ்எம்எஸ் அனுப்பியும் பயன்படுத்திக்கொள்ளலாம் 

இந்த சலுகையானது, கட்டாயம்  தினசரி சம்பளம் வாங்கும் தொழிலாளர்களுக்கு பெரிதும் பயன்தரும் வகையில் இருக்கும் என்கின்றனர் மக்கள். மேலும் மற்ற தோலைதொடர்பு நிறுவனங்களும் சிறப்பு சலுகை ஏதாவது அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.