பட்டப்பகலில் வேலூர் கோட்டையில் அதிர்ச்சி..! காதலன் கண் முன்னே காதலி கதற கதற கற்பழிப்பு..! கத்திமுனையில்..பாறை அடியில்..

வேலூர் கோட்டையில் ஓர் காதல் ஜோடியை வழிமறித்து கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வேலூர் கோட்டை பகுதியில் வாரந்தோறும் சனி ஞாயிறு என்றால் கூட்டம் சற்று அலைமோதும் குறிப்பாக மற்ற நாட்களில் மாலை நேரத்தில் காதல் ஜோடிகளை பரவலாக பார்க்க முடியும். இப்படி ஒரு தருணத்தில் கோட்டைக்கு சென்ற ஓர் காதல் ஜோடியை வழிமறித்து காதலனை சரமாரியாக தாக்கி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும் கத்திமுனையில் மிரட்டி வாங்கி சென்றுள்ளனர் மூன்று பேர் அடங்கிய மர்ம கும்பல்.

இதுகுறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து யார் அந்த காதல் ஜோடி? வேலூர் கோட்டையில் எந்த பகுதியில்  அவர்கள் இருந்தனர்? யாரெல்லாம் அவர்களைப் பின்தொடர்ந்தனர்? இது திட்டமிட்ட ஒன்றா அல்லது யாரும் இல்லாததை கண்டு கயவர்கள் இவ்வாறு நடந்து கொண்டுள்ளனரா என பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இருந்தபோதிலும் பட்டபகலில் காதலன் கண்முன்னே காதலியை கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்ததும், தான் அணிந்திருந்த நகைகளையும் பறித்து சென்றதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கும்போது,வேலூர் கோட்டைக்கு காதல் ஜோடிகள் வருவது வழக்கம். கோட்டையில் சற்று தூரமான பகுதிக்கு செல்வதும்... உயரமான பகுதிக்கு சென்று பெரும் கற்கள் மற்றும் பாறைகளுக்கு அருகில் தனிமையில் நேரத்தை செலவிடுவதும் இருந்து வந்தது. இந்த ஒரு சம்பவம் அனைவருக்கும் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமையும் என கருத்து தெரிவித்துள்ளனர்.