காய்கறி வாங்க வந்த வாலிபரை மடக்கி "கட்டாய திருமணம்"..! ஊரடங்கில்... அடங்கா ரவுடிகளின் அட்டூழியம் ..!

பீஹார்  வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்த அமித் என்ற 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் அவரது தந்தையுடன் காய்கறி வாங்க மார்கெட்டிற்கு சென்றுள்ளனர்.அப்போது அங்கு வந்த ரவுடி கும்பல் துப்பாக்கி முனையில் அமித்தை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுபடுத்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த ஒரு நிலையில் கொரோனாவில் இருந்து தப்பித்துக்கொள்ள அனைவரும் வீட்டிற்குள் அடைந்து உள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும்,வெளியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த ஒரு இலையில் காய்கறி வாங்க வந்த தந்தை மகனை கடத்தி உள்ளனர். அப்போது தந்தை மட்டும் அவர்களது பிடியில் இருந்து தப்பித்து சென்று உள்ளார்.பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே விரைந்து வந்த போலீசார் விசாரணையில் இறங்கினர்.

அப்போது , "ரவுடி கும்பல் அமித்தை மட்டும் காரில் ஏற்றி அருகில் இருந்த கிராமத்திற்கு கடத்தி சென்று, அப்பகுதியில் இருந்த இளம் பெண்ணுக்கும் அமித்துக்கும் கட்டாய திருமணம் செய்து வைத்ததும்...போலீஸ் வருவதை கண்டவுடன் அந்த ரவுடி கும்பல் தப்பித்து ஓடியதும் தெரிய வந்துள்ளது மேலும் எதற்காக இந்த திருமணம் ? அமித்துக்கும் இந்த பெண்ணிற்கும் தொடர்பு உள்ளதா ? ஒரு தலை காதலா ? அல்லது காதலித்து ஏமாற்றி விட்டாரா இந்த வாலிபர் என பல கோணங்களில் அதிரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு  நிலவி வருகிறது