வாக்கிங்'ல 5 வகைகள் இருக்கு.. எந்த வகை கூடுதல் பலனளிக்கும் தெரியுமா? 

Types Of Walking : உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஐந்து வகையான நடைப்பயிற்சிகள் குறித்து இந்த பதிவில் தெளிவாக காணலாம். 

5 types of walking and its benefits in tamil mks

நடைபயிற்சி தான் உடற்பயிற்சிகளிலே எளிமையான பயிற்சியாகும்.  நீங்கள் சரியான தோரணையுடன் நடந்தால் அவற்றின் முழுப்பலன்களை அடையலாம். நடைபயிற்சியில் சில வகைகளும் உண்டு. எந்த மாதிரி நடைபயிற்சி என்ன பலனளிக்கும் என்பதை இங்கு காணலாம். 

சி நடைபயிற்சி (Chi walking)

இந்த நடைபயிற்சியை ஒருவகை தியானம் எனலாம். தாய்-சி (Tai Chi) கொள்கைகளின் அடிப்படையிலானது. இந்த நடைப்பயிற்சியானது உங்களுடைய வேகத்தையும் நீங்கள் நடக்கும் தூரத்தையோ பொருத்தது அல்ல. சி நடைபயிற்சியை மேற்கொள்பவர்கள் ஆழ்ந்த சுவாசத்தை பின்பற்ற வேண்டும். உடல் அசைவுகளின் விழிப்புடன்  மெதுவான காலடிகளில் நடக்க வேண்டும். ஒவ்வொரு காலடியும், சுவாசமும் இணைவதில் கவனமாக இருக்க வேண்டும். இப்படியாக உங்களுடைய மனதை, இயக்கங்களுடன் சேர்ப்பதுதான் இப்பயிற்சியின் நோக்கம்.  உங்களுக்கு மன நிம்மதி தேவைப்படுகிறது என்றால் இந்த நடைபயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  ஏனென்றால் இப்படி நடப்பது உங்களுடைய மனதை சாந்தப்படுத்தி மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சி நடைபயிற்சியில் உங்களுடைய உடல், உள்ளம் மற்றும் சுற்றுப்புறம் குறித்த எண்ணங்களை தெரிந்து கொள்ள முடியும். சுவாச பயிற்சிகளை இந்த நடைபயிற்சியில் கவனமாக செய்ய வேண்டும். அது முக்கியமானது. 

இதையும் படிங்க:   தினமும் 20 நிமிடங்கள் திறந்த வெளியில் வாக்கிங்.. உங்க உடலில்  அற்புதம் நிகழும்!

வேகமாக நடத்தல்: 

வேகமான நடைபயிற்சி உங்களுக்கு அதிகமான கலோரிகளை கரைக்க உதவுகிறது. சுறுசுறுப்பாக நடக்கும் போது உடலும், மனமும் புத்துணர்வுடன் காணப்படும். இந்த நடைபயிற்சியில் ஒரு நிமிடத்திற்கு நீங்கள் குறைந்த பட்சம் 100 காலடிகள் நடக்க வேண்டும். உங்களுடைய வாட்ச், செல்போன் போன்றவற்றில் உள்ள பிட்னஸ் டிராக்கரில் இந்த எண்ணிக்கையை கவனித்து நடக்க வேண்டும்.  உங்களுடைய இதயத்துடிப்பு அதிகமாகும் போது, வேகத்தை குறைத்து மீண்டும் வேகமாக நடக்க வேண்டும். 

இதையும் படிங்க: தினமும் 5 ஆயிரம் காலடிகள் நடந்தால்.. எல்லாருக்கும் வர்ற இந்த '1' நோய் உங்களுக்கு வராது..!  

உலா நடைபயிற்சி: 

நாள்தோறும் நடைபயிற்சி செய்வது எண்ணற்ற ஆரோக்கியமான நன்மைகளை உங்களுக்கு தருகிறது. ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 4 நாட்கள் முதல் ஐந்து நாட்கள் வரை ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்வது உங்களுடைய எலும்புகளை, தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த நடைபயிற்சியில் நீங்கள் தனித்துவமாக எதுவும் செய்யத் தேவையில்லை. தினமும் கைகளை நன்கு வீசி சுறுசுறுப்பாக நடைபெற்று மேற்கொண்டாலே போதும். 

நோர்டிக் வாக்கிங்: 

மூட்டு பிரச்சனை இருப்பவர்கள், ஏதேனும் காயங்களில் இருந்து குணமாகி வந்தவர்கள்  நோர்டிக் வாக்கிங் செய்யலாம். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நோர்டிக் நடைபயிற்சியில் ஆக்ஸிஜன் அதிகம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இப்படியாக உங்கள் இதயம் வலுவடைகிறது. இந்த நடைபயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறையும். இதய நோய், நீரிழிவு நோய்களின் ஆபத்தை குறைக்க முடியும். இந்த வாக்கிங் உங்களுடைய முழு உடலிற்கான பயிற்சியாக இருக்கும். குறிப்பாக அப்பர் பாடி வொர்க் அவுட் ஆகும்.  இதற்கென தனி ஸ்டிக்குகள் உள்ளன. அவற்றின் உதவியுடன் நடக்கலாம். 

ரேஸ் வாக்கிங்

ரேஸ் நடைபயிற்சி என்பது போட்டி நடைப்பயணத்தின் ஒரு வடிவம். இதற்கென தனிப்பட்ட விதிகள் தேவைப்படுகின்றன. இந்த நடைபயிற்சி செய்வோர்  எப்போதும் தரையுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். இந்த ரேஸ் வாக்கிங் ஒருவருடைய வேகம், சகிப்புத்தன்மை ஆகிய இரண்டுக்கும் சவால் விடும் பயிற்சியாகும். இந்த பயிற்சி இதயத்தில் நல்ல பலன்களை தரும். உங்களுடைய கார்டியோவாஸ்குலர் சகிப்புத்தன்மையை அதிகரிக்க உதவும். இப்பயிற்சி கால்கள், இடுப்பு, வயிற்று தசைகளை  வலுப்படுத்த உதவுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios