தங்க நகைகள், பட்டுப் புடவை போன்ற காஸ்ட்லி பொருட்களை வாங்குவதை விட அதை பராமரிப்பது தான் பெரிய விஷயமாக இருக்கும். அதிலும் இன்று தங்கம் விற்கும் விலைக்கு அதை பாதுகாப்பது தனி வேலையாகி விடுகிறது. பழைய நகைகளை கூட புதுசு போல எப்போது பளபளப்பாக வைத்திருக்க இந்த வழிமுறைகளை பின்பற்றிப் பாருங்க.

தங்கம் நகைகள் நம்மை அழகாக காட்டும் என்பதை விட, ராயல் லுக்கில் காட்சி தருவதற்காக பலரும் விதவிதமாக தங்க நகைகளை வாங்கி அணிவது உண்டு. ஆனால், ஆசைப்பட்டு வாங்கும் நகைகள் காலப்போக்கில் அவை மங்கலாக மாறும் அல்லது அழுக்காகிப் போகும். அதனால், ஒரிஜினல் தங்கம் தானா என சந்தேகம் வரும் அளவிற்கு ஆகியவிடும். தங்க நகைகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் புதுசு போல் ஜெலிக்க சில எளிமையான டிப்ஸ் வீட்டிலேயே பயன்படுத்தினாலே போதும். இனி பாலீஷ் போட்டு பணத்தை வீணடிக்க வேண்டியதே கிடையாது. 

தங்க நகைகளை சுத்தம் செய்யும் முறை :

மென்மையாக சுத்தம் செய்யும் முறை : 

தங்கத்தை சோப்புநீர் கலந்த வெதுவெதுப்பான நீரில் இருபது நிமிடங்கள் மிதமாக ஊற வைத்து, மிருதுவான பிரஷ் அல்லது பஞ்சால் மெதுவாக துடைக்க வேண்டும். பிறகு, சுத்தமான துணியால் துடைக்கவும். சிறப்பு சுத்தம் செய்யும் சாதனங்களை (gold cleaning solution) பயன்படுத்தினால் மேலும் சிறப்பாக இருக்கும்.

ரசாயனங்களைத் தவிர்க்கனும் :

பர்ஃபியூம், ஸ்ப்ரே, சோப்பு, கிரீம் போன்ற ரசாயனங்கள் தங்கத்தின் மேல் பூச்சுகளை பாதிக்கக்கூடும். அதனால், இவற்றை அணியும் முன் நகைகளை கழற்றி வைக்க வேண்டும். பவுடர், அழகு பொருட்கள் போன்றவை தங்கத்தின் மேல் படிந்தால் அதன் இயல்பான ஜொலிக்கும் தன்மை குறையும்.

உராய்வை குறைப்பது : 

தங்கம் மற்ற நகைகளுடன் அதிகமாக உராய்வதை தடுப்பது அவசியம். ஒவ்வொரு தங்க நகைகளை (22கிராம், 24கிராம்) மிகவும் காயப்படக் கூடியவை என்பதால் அவற்றை தனியாக வைக்க வேண்டும்.

நேரடி வெளிச்சத்திலிருந்து பாதுகாப்பது : 

நீண்ட நேரம் சூரிய வெளிச்சத்தில் அல்லது அதிக ஈரப்பதம் உள்ள இடத்தில் வைத்தால் தங்கத்தின் இயல்பான மின்னல் குறையலாம். இதனால், அதனை பாதுகாப்பாகவும் குறைந்த ஈரப்பதம் உள்ள இடத்திலும் வைக்க வேண்டும். மேலும், தண்ணீர் மற்றும் வேதியியல் வஸ்துக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டால், தங்கம் அதன் தரத்தை இழக்கக்கூடும்.

ரொமான்டிக்கான உறவை.. பெண்களை விட ஆண்களே அதிகம் நாடுவது ஏன்?

அடிக்கடி சுத்தம் செய்தல் : 

மாதத்திற்கு ஒருமுறை குறைந்த பட்சம் தங்கத்தை சுத்தம் செய்து அதன் பிரகாசத்தை நீடிக்கலாம். அடிக்கடி அணியும் நகைகளை வாரத்திற்கு ஒருமுறை சிறிது நேரம் மட்டும் சுத்தம் செய்தால் போதுமானது. வீட்டில் சிறப்பாக சுத்தம் செய்ய விரும்பினால், வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு அம்மோனியா (ammonia) சேர்த்து நகைகளை கழுவலாம். ஆனால், இது வாரம் ஒருமுறை மட்டுமே செய்ய வேண்டும்.

நகை பெட்டியில் தனியாக வைத்தல் : 

தங்கத்தை மற்ற நகைகளுடன் சேர்த்து வைப்பதை விட, ஒவ்வொன்றாக தனிப்பட்ட துணி பைகளைப் பயன்படுத்தி பாதுகாக்கலாம். சில நகை பெட்டிகளில் மென்மையான துணி அடுக்கு உள்ளதால் அவற்றில் வைக்கலாம். மேலும், ஒவ்வொரு நகைக்கும் தனிப்பட்ட பெட்டி பயன்படுத்தினால் நகை ஒன்றுடன் ஒன்று உராய்வதைத் தவிர்க்கலாம்.

நகை கலைஞர்களிடம் பராமரிப்பு செய்வது : 

ஆண்டுக்கு ஒரு முறை நகை வல்லுநர்களிடம் பரிசோதிக்கவும். சிறு பழுதுகளை சரிசெய்து கொள்ளவும் செய்தால் தங்கம் நீண்ட நாள் பிரகாசமாக இருக்கும். சில தங்கம் மென்மையானவை என்பதால் அவற்றை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். நகை திருத்தம் (polishing) செய்து ஜொலிப்பாக வைத்திருக்கலாம்.

RO இல்லாமல் வீட்டிலேயே தண்ணீரை சுத்திகரிக்க 5 எளிய முறைகள்

நகைகளை அணியும் நேரம் :

நீங்கள் கடுமையான வேலைகள் செய்வதாக இருந்தால், வேலை செய்யும் போது தங்க நகைகளை கழற்றி வைப்பது நல்லது. சமையல், உடற்பயிற்சி, உட்புற வேலைகள் போன்றவற்றின் போது தங்கம் அழுக்காகலாம் அல்லது பளபளப்பு குறையலாம்.