வீட்டில் சுத்தமான நீரை குடிக்க வேண்டும் என்றால் RO மூலம் சுத்திகரித்து மட்டும் தான் குடிக்க முடியும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் RO இல்லாமலேயே, வீட்டிலேயே மிக எளிமையான முறையில் சுத்திகரிக்கப்பட்ட நீரை குடிக்க முடியும். இதற்கு ஒன்ற அல்ல, 5 முறைகள் உள்ளது. இந்த முறைகளை நீங்களும் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

தூய்மையான குடிநீர் உடல் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளிற்கும் மிகவும் அவசியமானது. இதனால் பலரும் வீட்டிலேயே RO (Reverse Osmosis) அமைத்து நீரை சுத்தம் செய்து குடிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் சுத்தம் செய்யப்பட்ட கேன் தண்ணீர்களை தான் வாங்கி குடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் வசதி இல்லாதவர்கள் சுத்தமான நீரை குடிக்க என்ன வழி? RO அமைப்பு இல்லாமல், தண்ணீரை சுத்தமாக்குவது எப்படி என்று நினைக்கலாம். இயற்கையான மற்றும் அழுத்தமான நவீன முறைகள் மூலம், பிற மாற்று வழிகளைப் பயன்படுத்தி நீரை சுத்திகரிக்கலாம்.

RO இல்லாமல் நீரை சுத்திகரிக்க 5 எளிய, சிறந்த வழிகள் : 

1. காய்ச்சி பருகுதல் – காலத்திற்கும் தகுந்த சிறந்த முறையா?

* நீரை உயர்ந்த சூட்டில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடுங்கள்.
* பின்னர் தண்ணீரை இயல்பாக ஆற விடவும்.
* ஒரு சுத்தமான கண்ணாடி அல்லது ஸ்டீல் பாத்திரத்தில் சேமிக்கவும்.

நன்மைகள்:

* நீரில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ்கள், நுண்ணுயிரிகள் அழிகின்றன.
* குடல் நோய்களை தடுக்கும்.
* எளிதாக வீட்டில் செய்யக்கூடிய நம்பகமான முறையாகும்.
* நீரை அதிகமாக காய்ச்சினால் முக்கிய தாது உப்புகள் (Essential Minerals) குறையலாம்.

2. கூழாங்கல் மற்றும் மணல் வடிப்பு – இயற்கை சுத்திகரிப்பு முறை : 

* ஒரு பெரிய பாத்திரத்தில், கீழே மணல் அடுக்கு, அதன் மேல் சிறிய கூழாங்கற்கள், மேலும் மேலே ஆக்டிவேடட் கரித்துகள் வைக்கவும்.
* மேலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றவும்.
* நிழலிடத்தில் சுத்தமான பாத்திரத்தில் சேமிக்கவும்.
* இதில் படித்துள்ள அழுக்குகள் கீழே படிந்ததும், மேலிருக்கும் தண்ணீரை வடிகட்டி பயன்படுத்தலாம்.

நன்மைகள்:


* நீர் நிறம் மற்றும் கசப்பு தன்மையை மாற்றி, உடலுக்கு ஏற்றவாறு மாற்றும்.
* நச்சுச் சேர்மங்களை குறைத்து, நீரை தற்காலிகமாக சுத்தமாக்கும்.
* இது பள்ளத்தாக்கு பகுதிகளில் பரவலாக பயன்படுத்தப்படும் இயற்கை முறை.
* சில நுண்ணுயிரிகள் இதன் மூலம் முழுவதுமாக நீங்காமல் இருக்கலாம். அப்போது மேலும் சுத்திகரிப்பு தேவைப்படும்.

3. முருங்கை விதை சுத்திகரிப்பு முறை :

முருங்கை விதைகளை (Moringa Seeds) நன்றாக அரைத்து, ஒரு டீஸ்பூன் அளவு தூளை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து விடவும்.
ஒரு மணி நேரம் காத்திருந்து பார்த்தால், கீழே தேவையற்ற மண் தனிமங்கள் தங்கி விடும். பின்பு மேலே இருக்கும் தூய நீரை வடிகட்டி குடிக்கலாம்.

நன்மைகள்:


* நீரில் இருக்கும் கழிவுகளை உறிஞ்சி, நீரை தெளிவாக மாற்றும்.
* நச்சுப் பொருட்களை அகற்றி, குடிக்க ஏற்றவாறு செய்யும்.
* இயற்கையாகவும், குறைந்த செலவில் செய்யக்கூடிய முறையாகும்.
* இதை நீண்ட காலம் சேமித்து வைக்க முடியாது. உடனே பயன்படுத்த வேண்டும்.

4. சூரிய ஒளி சுத்திகரிப்பு :

* சுத்தமான பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் நிரப்பி, கடுமையான சூரிய ஒளியில் 6 முதல் 8 மணி நேரம் வைக்கவும்.
* சூரியனின் அல்ட்ராவயலட் (UV) கதிர்கள் நீரில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும்.
* பின்னர் தண்ணீரை குளிர்ச்சி அடைய விடவும்.

நன்மைகள்:


* மிகவும் குறைந்த செலவில், எளிதாக செய்யக்கூடிய முறை.
* மழைநீர் மற்றும் குளநீர் போன்றவற்றை சுத்தமாக்க சிறந்தது.
* நீரிலுள்ள நுண்ணுயிரிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும்.
* இது மிகவும் மாசுபட்ட நீரை சுத்தம் செய்யாது.

5. தாவர மூலிகைகள் சுத்திகரிப்பு முறை

துளசி இலைகள் , வெற்றிலையின் சாறு, கிராம்பு அல்லது இலவங்கப் பட்டை போன்ற மூலிகைகளை நீரில் சில மணி நேரம் ஊறவிடவும். பின்னர் வடிகட்டி பருகலாம்.

நன்மைகள்:


* நீரில் உள்ள நச்சுகளை நீக்கி, உடலுக்கு நன்மை தரும்.
* பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது.
* அமிலத்தன்மை மற்றும் செரிமான கோளாறுகளை சீராக்கும்.
* நீரை நன்கு வடிகட்டி பருகுதல் அவசியம்.

எது சிறந்தது?

காய்ச்சி பருகுதல் என்பது பழமையான மற்றும் பாதுகாப்பான முறையாக இருக்கும். ஆனால், இயற்கையான முறைகளை முயற்சி செய்ய, முருங்கை விதை வடிப்பு மற்றும் சூரிய ஒளி சுத்திகரிப்பு சிறந்தவை.