ஐபிஎல் 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த சீசனில் ஐந்தாவது முறையாக டைட்டிலை வென்று சாதனை படைத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

இந்த சீசனில் இளம் வீரர்கள் அபாரமாக ஆடினர். தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இளம் வீரர்கள் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தை ஈர்த்ததுடன் பாராட்டையும் பெற்றனர். ராகுல், தவான், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகிய வீரர்களும் மிகச்சிறப்பாக ஆடினர்.

இந்த சீசனில் அதிக ரன்களை குவித்த(670) வீரரான கேஎல் ராகுலையும், அறிமுக சீசனிலேயே அசத்திய தேவ்தத் படிக்கல்லையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ள சேவாக்,  சூர்யகுமார் யாதவ், விராட் கோலி ஆகியோரை தனது அணியில் எடுத்து, கோலியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார். ஐந்தாவது முறையாக கோப்பையை வென்ற ரோஹித்தை கேப்டனாக தேர்வு செய்யாமல் ஒருமுறை கோப்பையை வெல்லாத, இந்த சீசனிலும் அந்த வாய்ப்பை தவறவிட்ட கோலியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.

அதற்கடுத்த வித்தியாசமான தேர்வாக, தொடக்க வீரர் டேவிட் வார்னரை மிடில் ஆர்டரில் தேர்வு செய்துள்ளார். டிவில்லியர்ஸை ஆறாம் வரிசையில் தேர்வு செய்துள்ள சேவாக், ஃபாஸ்ட் பவுலர்களாக ரபாடா, பும்ரா, ஷமி ஆகியோரையும் ஸ்பின்னர்களாக ரஷீத் கான் மற்றும் சாஹலையும் தேர்வு செய்துள்ளார்.

வீரேந்திர சேவாக்கின் ஐபிஎல் 2020 சிறந்த லெவன்:

கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி(கேப்டன்), டேவிட் வார்னர், டிவில்லியர்ஸ், ரபாடா, ரஷீத் கான், ஷமி, சாஹல், பும்ரா.