Asianet News TamilAsianet News Tamil

ராயுடு பண்றது கொஞ்சம்கூட சரியில்ல.. கண்டிச்சு வையுங்க.. ஸ்பாட்டுலயே தோனியிடம் எச்சரிக்கை விடுத்த அம்பயர்

மன்கட் முறையில் ரன் அவுட் செய்வதற்கு முன் பவுலர், அந்த குறிப்பிட்ட பேட்ஸ்மேனுக்கு ஒருமுறை எச்சரிக்கை விடுக்கலாம் என்ற கருத்து பரவலாக இருந்தது. அப்படி செய்யாததால் ஸ்பிரிட் ஆஃப் கேம் பாதிக்கப்பட்டதாக பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். 
 
umpire convey his warning to dhoni regarding rayudu leaving crease before bowling
Author
Chennai, First Published Apr 7, 2019, 12:14 PM IST

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் கடும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய சம்பவம் என்றால், அது மன்கட் ரன் அவுட்டுதான். ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார் அஷ்வின். 

அஷ்வின் அப்படி செய்தது கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டே அஷ்வின் செயல்பட்டதால் அதில் தவறு ஏதும் இல்லை என்று அஷ்வினுக்கு ஆதரவுக்குரல்கள் எழுந்த நிலையில், ஆட்டத்தின் ஸ்பிரிட்டை கெடுக்கும் விதமான செயல் என்ற எதிர்ப்புக்குரல்களும் வலுவாக இருந்தன.

umpire convey his warning to dhoni regarding rayudu leaving crease before bowling

அஷ்வின் பட்லரை அவுட் செய்தது தவறு இல்லை; எனினும் ஒருமுறை எச்சரிக்கை விடுத்திருக்கலாம் என்ற கருத்து பரவலாக இருந்தது. இந்நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் குருணல் பாண்டியா, மயன்க் அகர்வாலுக்கு மன்கட் ரன் அவுட் குறித்த எச்சரிக்கை விடுத்தார். அஷ்வின் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டிருந்த நிலையில், குருணலின் செயல் கவனத்தை ஈர்த்தது. 

umpire convey his warning to dhoni regarding rayudu leaving crease before bowling

மன்கட் முறையில் ரன் அவுட் செய்வதற்கு முன் பவுலர், அந்த குறிப்பிட்ட பேட்ஸ்மேனுக்கு ஒருமுறை எச்சரிக்கை விடுக்கலாம் என்ற கருத்து பரவலாக இருந்தது. அப்படி செய்யாததால் ஸ்பிரிட் ஆஃப் கேம் பாதிக்கப்பட்டதாக பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். 

ஆனால் ஒவ்வொரு முறையும் பேட்ஸ்மேன், பந்துபோடுவதற்கு முன்னரே கிரீஸை விட்டு வெளியேறி ஓடுவதற்கு தயாராவது என்பது ஸ்பிரிட் ஆஃப் கேமை பாதிப்பதாக இல்லையா? என்ற கேள்வி எழுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில், தோனி பேட்டிங் ஆடும்போது மறுமுனையில் நின்ற ராயுடு, பவுலர் பந்து போடுவதற்கு முன்பே பலமுறை கிரீஸை விட்டு நகர்ந்தே நின்றார். இதைக்கண்ட அம்பயர் டக்கர், தோனியிடம் ராயுடுவின் செயல் குறித்து எச்சரிக்கை விடுத்தார். அதன்பிறகுதான் ராயுடு அடங்கினார். இதுபோன்று பேட்ஸ்மேன்கள் செயல்படும்போது மன்கட் முறையில் ரன் அவுட் செய்வதில் தவறேதும் இல்லையே..

umpire convey his warning to dhoni regarding rayudu leaving crease before bowling

umpire convey his warning to dhoni regarding rayudu leaving crease before bowling

Follow Us:
Download App:
  • android
  • ios