IPL 2020: அதிக டுவீட் போட்ட அணி, அதிக ரீடுவீட் செய்யப்பட்ட டுவீட்.. முழு லிஸ்ட்டையும் வெளியிட்ட Twitter India
ஐபிஎல் 2020 டுவீட் குறித்த முழு பட்டியலை டுவிட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த சீசனில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாததால், டிவியில் அதிகமானோர் ஐபிஎல் போட்டிகளை பார்த்தனர். அதனால் கடந்த சீசனைவிட 28 சதவிகிதம் அதிகமானோர் ஐபிஎல்லை பார்த்திருக்கின்றனர்.
கடந்த சீசன்களைவிட இந்த சீசனில் சமூக வலைதளங்கள் மிகப்பெரிய அங்கம் வகித்தன. அந்தவகையில் இந்த சீசனில் செய்யப்பட்ட டுவீட்கள், அவற்றிற்கு கிடைத்த வரவேற்புகள் குறித்த விவரத்தை டுவிட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஐபிஎல் 13வது சீசனில் அதிக டுவீட்களை செய்த அணி சிஎஸ்கே. சிஎஸ்கேவிற்கு அடுத்த இடத்தில் ஆர்சிபியும், 3ம் இடத்தில் மும்பை இந்தியன்ஸும், 4ம் இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும், ஐந்து மற்றும் ஆறாம் இடங்களில் முறையே கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் உள்ளன. கடைசி 2 இடங்களில் முறையே கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் உள்ளன.
ஒரு வீரரை பற்றி அதிக டுவீட்டுகள் பதிவிடப்பட்டதில், ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தான் முதலிடத்தை பிடித்தார்.
அதிகமான ரீடுவீட் செய்யப்பட்டது, நிகோலஸ் பூரானின் கேட்ச்சை பாராட்டி சச்சின் டெண்டுல்கர் போட்ட டுவீட் தான். ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் டீப் மிட் விக்கெட் திசையில் பவுண்டரி லைனுக்குள் டைவ் அடித்து பூரான் செய்த ஃபீல்டிங்கை, தனது வாழ்க்கையிலேயே தான் பார்த்த சிறந்த ஃபீல்டிங் என சச்சின் பதிவிட்ட டுவீட், 23 ஆயிரம் ரீடுவீட் செய்யப்பட்டுள்ளது.