ஐபிஎல் 13வது சீசன் நாளையுடன் முடிவடைகிறது. நாளை துபாயில் நடக்கும் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸும் டெல்லி கேபிடள்ஸும் மோதுகின்றன. இந்த சீசன் முழுவதுமே இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்தது.

தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய் ஆகிய இளம் வீரர்கள் மிகச்சிறப்பாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். ஆனாலும் இந்த சீசனுக்கான பெஸ்ட் லெவனில் ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்ரவுண்டரும் சன்ரைசர்ஸ் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான டாம் மூடி, இஷான் கிஷன், ராகுல் டெவாட்டியா ஆகிய இரு இளம் வீரர்களை மட்டுமே இந்த சீசனின் பெஸ்ட் லெவனில் தேர்வு செய்துள்ளார்.

டாம் மூடி தேர்வு செய்த இந்த சீசனின் பெஸ்ட் லெவன்:

ஷிகர் தவான், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், டிவில்லியர்ஸ், இஷான் கிஷன், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், ஜோஃப்ரா ஆர்ச்சர், ககிசோ ரபாடா, சாஹல், பும்ரா.