ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் கேகேஆரும் ஆடிவருகின்றன. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் இயன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஆனால் கேகேஆர் அணி பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை. கேகேஆர் அணியின் தொடக்க வீரர் திரிபாதி 7 ரன்களிலும், நிதிஷ் ராணா 5 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 4 ரன்களிலும் ஆட்டமிழக்க, கில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆண்ட்ரே ரசலுக்கு அருமையான பவுன்ஸர் போட்டு 12 ரன்களில் வீழ்த்தினார் பும்ரா.

ரசல் அவுட்டாகும்போது, கேகேஆர் அணியின் ஸ்கோர் 10.4 ஓவரில் வெறும்  61 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. அதன்பின்னர் மோர்கனும் கம்மின்ஸும் இணைந்து ஆடிவருகின்றனர்.

இந்த போட்டியின் ஆரம்பத்தில் முதல் 2 ஓவர்களில் நிறைய மிஸ்ஃபீல்டு செய்தனர் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள். அவற்றையெல்லாம் மழுங்கடிக்கும் விதமாக ஒரு அபாரமான கேட்ச்சை பிடித்து, அந்த பந்தை வீசிய பவுலரும், உலகின் மிகச்சிறந்த ஃபீல்டர்களில் ஒருவருமான போல்ட்டையே ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் சூர்யகுமார்.

கேகேஆர் இன்னிங்ஸில் போல்ட் வீசிய 3வது ஓவரின் ஐந்தாவது பந்தில் புல் ஷாட்டின் மூலம் பவுண்டரி அடித்த திரிபாதி, போல்ட் ஷார்ட் பிட்ச்சாக வீசிய அடுத்த பந்தை ஆஃப் திசையில் அறைந்தார்; நல்ல ஷாட் தான் அது. அந்த ஷாட்டில் எந்த குறையும் இல்லை. ஆனால் பாயிண்ட் திசையில் நின்ற சூர்யகுமார் யாதவ், அருமையாக கேட்ச் பிடித்தார். அதிவேகமாக வந்த அந்த பந்தை, செம டைமிங்கில் அருமையாக பிடித்தார் சூர்யகுமார். அந்த கேட்ச்சை பார்த்து போல்ட்டே வியந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் ஜாம்பவானுமான ஜெயவர்தனே, டக் அவுட்டில் எழுந்து நின்று கைதட்டினார். அந்த வீடியோ இதோ..