Asianet News TamilAsianet News Tamil

ஆர்சிபி மாற்ற வேண்டியது கேப்டனை அல்ல; அதைத்தான்..! சேவாக் அதிரடி

ஐபிஎல் அடுத்த சீசனில் ஆர்சிபி செய்ய வேண்டிய காரியம் என்னென்ன என்ற ஆலோசனையை சேவாக் வழங்கியுள்ளார்.
 

sehwag advise to rcb for ipl 2021
Author
Dubai - United Arab Emirates, First Published Nov 7, 2020, 8:09 PM IST

ஐபிஎல் அடுத்த சீசனில் ஆர்சிபி செய்ய வேண்டிய காரியம் என்னென்ன என்ற ஆலோசனையை சேவாக் வழங்கியுள்ளார்.

இதுவரை ஐபிஎல்லில் ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி அணி, வழக்கம்போலவே இந்த சீசனிலாவது முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியது. ஆனால் இந்த சீசனிலும் வழக்கம்போலவே சொதப்பி எலிமினேட்டருடன் வெளியேறியது.

எலிமினேட்டரில் சன்ரைசர்ஸை எதிர்கொண்ட ஆர்சிபி அணி, 131 ரன்கள் மட்டுமே அடித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது சன்ரைசர்ஸ் அணி. இந்த சீசனில் ஆர்சிபி அணியின் பவுலிங் நன்றாக இருந்தது. ஆனால் கோலியும் டிவில்லியர்ஸும் இந்த சீசனில் பெரிதாக ஜொலிக்காததால் பேட்டிங்கில் சொதப்பியதால் தான் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

விராட் கோலியையும் டிவில்லியர்ஸையும் அதிகமாக சார்ந்திருப்பதே ஆர்சிபி அணியின் பெரும் பாதிப்பு. இந்த சீசனில் தேவ்தத் படிக்கல் நம்பிக்கையளித்தார். ஆனால் ஃபின்ச், மோரிஸ் ஆகியோர் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்கவில்லை. இந்த சீசனிலும் ஆர்சிபி அணி சொதப்பலாகவே ஆடியதால், கோப்பையை முதல் முறையாக வெல்லும் வாய்ப்பை இந்த முறையும் இழந்தது. 

இதையடுத்து விராட் கோலியின் கேப்டன்சியும் விமர்சனத்துக்குள்ளானது. ஆர்சிபி அணி விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸை கடந்து யோசித்து, அணியை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த சீசனில் அது செய்யப்பட்டதாக கோலி நம்பினார். ஆனால் அவரது நம்பிக்கை வீண் போனது.

இந்நிலையில், ஆர்சிபி அணி குறித்து பேசியுள்ள சேவாக், விராட் கோலி இந்திய அணிக்கே கேப்டனாக இருக்கிறார். ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். ஆனால் அவர் கேப்டன்சி செய்யும் ஆர்சிபி அணிக்கு கேப்டன்சி செய்யும்போது மட்டும் தோல்விகளை சந்திக்கிறார். ஒரு கேப்டன் நல்ல அணியை பெறுவது முக்கியம். எனவே ஆர்சிபி அணி நிர்வாகம் மாற்ற வேண்டியது கேப்டனை அல்ல; அணியை.. கேப்டனை மாற்றுவதை பற்றி யோசிப்பதைவிட, வலுவான அணியை கட்டமைப்பது குறித்து யோசிக்க வேண்டும்.

அனைத்து அணிகளும் நல்ல பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளன. ஆனால் ஆர்சிபி விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸை மட்டுமே சார்ந்திருக்கிறது. படிக்கல் செட் ஆகிவிட்டார். அவுருடன் தொடக்க வீரராக இறங்க மற்றொரு நல்ல வீரர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். மேலும் ஒரு நல்ல ஃபினிஷர் தேவை. அப்படியிருந்தால்,  கோலி மற்றும் டிவில்லியர்ஸுடன் சேர்த்து அந்த ஐந்து பேர் போதும் ஆர்சிபியை கரைசேர்க்க.. அதேபோல இந்திய ஃபாஸ்ட் பவுலர்கள் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios