ஐபிஎல் 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறிய டெல்லி கேபிடள்ஸை வீழ்த்தை சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது.

இந்த சீசனில் சிறப்பாக ஆடிய 11 வீரர்கள் கொண்ட அணியை நியூசிலாந்து முன்னாள் ஜாம்பவான் ஸ்காட் ஸ்டைரிஸ் தேர்வு செய்துள்ளார். தனது அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ராகுல் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். ராகுல் இந்த சீசன் முழுவதும் மிகவும் அபாரமாக ஆடி இந்த சீசனில் டாப் ஸ்கோரராக இருந்தார். 

3ம் வரிசை வீரராக மும்பை இந்தியன்ஸுக்காக மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவை தேர்வு செய்துள்ள ஸ்டைரிஸ்,  நான்காம் வரிசையில், இந்த சீசனில் ஆர்சிபி அணிக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்திராத விராட் கோலியை தேர்வு செய்துள்ளார். இந்த சீசனில் சரியாக ஆடாத கோலியை ஸ்டைரிஸ் தேர்வு செய்தது வியப்புதான்.

இளம் வீரர்கள் இஷான் கிஷன், டெவாட்டியா ஆகியோரையும் ஸ்பின்னர்களாக ரஷீத் கான் மற்றும் சாஹலையும், ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஆர்ச்சர் மற்றும் ரபாடாவையும் தேர்வு செய்துள்ளார் ஸ்டைரிஸ்.

ஸ்காட் ஸ்டைரிஸ் தேர்வு செய்த ஐபிஎல் 2020ன் சிறந்த லெவன்:

டேவிட் வார்னர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, இஷான் கிஷன், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், ஆர்ச்சர், ரபாடா, பும்ரா, சாஹல்.