ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. உலக கோப்பைக்கு முன் ஐபிஎல் நடப்பதால், உலக கோப்பை அணியில் பரிசீலனையில் உள்ள வீரர்கள் ஐபிஎல்லில் பரிசோதிக்கப்படுகிறார்கள்.
ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. உலக கோப்பைக்கு முன் ஐபிஎல் நடப்பதால், உலக கோப்பை அணியில் பரிசீலனையில் உள்ள வீரர்கள் ஐபிஎல்லில் பரிசோதிக்கப்படுகிறார்கள்.
இந்திய அணியில் நான்காம் வரிசை சிக்கல் இன்னும் தீராத நிலையில், விஜய் சங்கர் அந்த இடத்திற்கு எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அவர் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடினாலும் சீராக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறுகிறார்.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இக்கட்டான சூழலில் நிதானமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் ஐபிஎல்லில் சூழலுக்கு ஏற்ப ஆடாமல் அதிரடியாக எல்லா பந்துகளையும் அடிக்க முனைந்து ஆட்டமிழக்கிறார்.

இந்நிலையில், விஜய் சங்கருக்கு முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள டுவீட்டில், விஜய் சங்கர் அதிரடியாக ஆடக்கூடியவர் தான். ஆனால் எல்லா பந்துகளையும் அடித்த ஆட அவர் ரிஷப் பண்ட் இல்லை. சூழலுக்கு ஏற்றவாறு விஜய் சங்கர் ஆட முனைய வேண்டும். அதை விராட் கோலியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
