டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் கோலி, சன்ரைசர்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தார். சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவும் வார்னரும் இணைந்து ஆர்சிபியை அலறவிட்டனர். 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் கோலி, சன்ரைசர்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தார். சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவும் வார்னரும் இணைந்து ஆர்சிபியை அலறவிட்டனர். 

தொடக்கம் முதலே பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடினர். முதல் விக்கெட்டை வீழ்த்தவே ஆர்சிபி அணி திணறியது. அதிரடியாக ஆடிய ஜானி பேர்ஸ்டோ, ஐபிஎல்லில் தனது முதல் சதத்தை விளாசினார். 56 பந்துகளில் 114 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார் பேர்ஸ்டோ. முதல் விக்கெட்டுக்கு பேர்ஸ்டோ - வார்னர் ஜோடி 185 ரன்களை குவித்தது. அதன்பின்னர் களத்திற்கு வந்த விஜய் சங்கர் ஒரு சிக்சருடன் 3 பந்துகளில் 9 ரன்கள் அடித்து ரன் அவுட்டாகி வெளியேறினார். 

இன்னிங்ஸின் கடைசி ஓவரில் வார்னரும் சதத்தை எட்டினார். சன்ரைசர்ஸ் அணி 231 ரன்களை குவித்தது. 232 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய ஆர்சிபி அணி வெறும் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் அணி.

இந்த போட்டியில் வார்னரும் பேர்ஸ்டோவும் ஆடிய இன்னிங்ஸ் அபாரமானது. இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 185 ரன்களை குவித்தது. இதுதான் ஐபிஎல்லில் தொடக்க ஜோடி அடித்த அதிகபட்ச ஸ்கோர். தொடக்கம் முதலே அடித்து ஆடிய இருவரும் ஆட்டத்தை அப்போதே ஆர்சிபி அணியிடமிருந்து பறித்தனர். அதன்பின்னர் போட்டி முழுவதுமே ஒருசார்பான போட்டியாக அமைந்துவிட்டது. 

56 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 114 ரன்களை குவித்தார் பேர்ஸ்டோ. 55 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 100 ரன்களை குவித்தார் வார்னர். இவர்களின் இந்த பேட்டிங்கை பார்த்த மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், வெகுவாக பாராட்டியுள்ளார். வார்னர் - பேர்ஸ்டோ பேட்டிங் ஆடுவதை பார்க்க அருமையாக இருந்தது. அபாரமாக ஆடினார்கள் என்று சச்சின் டுவிட்டரில் பாராட்டியுள்ளார்.