ஐபிஎல் 12வது சீசன் வரும் 23ம் தேதி(நாளை) தொடங்குகிறது. இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன. 

விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய ஜாம்பவான்கள் அணியில் இருந்தும் இதுவரை ஆர்சிபி அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. கோலியின் மோசமான கேப்டன்சியும் அதற்கு ஒரு காரணம். 

இந்நிலையில், இந்த சீசனிலாவது முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஆர்சிபி அணி களமிறங்குகிறது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியனும் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியுமான சிஎஸ்கேவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது ஆர்சிபி அணி. 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் அதிரடி வீரர் ஹெட்மயர், ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோரை அணியில் எடுத்துள்ளது ஆர்சிபி. சிஎஸ்கே அணிக்கு எதிரான தொடக்க போட்டியில் ஆர்சிபி அணியில் களமிறங்கும் 11 வீரர்களை கொண்ட உத்தேச ஆர்சிபி அணியை பார்ப்போம். 

சிஎஸ்கே அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஆடும் உத்தேச ஆர்சிபி அணி:

விராட் கோலி(கேப்டன்), பார்த்திவ் படேல், டிவில்லியர்ஸ், ஹெட்மயர், கோலின் டி கிராண்ட்ஹோம், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், சாஹல், உமேஷ் யாதவ், சிராஜ்.