ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று மும்பை வான்கடேவில் நடந்தது. 

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 187 ரன்களை குவித்தது. 188 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ரஹானே - பட்லர் தொடக்க ஜோடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தது பட்லர் அதிரடியாக ஆடி 89 ரன்களை குவித்தார். பட்லரின் அதிரடியால் ராஜஸ்தான் அணியின் வெற்றி எளிதானது. எனினும் அவரது விக்கெட்டுக்கு பிறகு ராஜஸ்தான் அணியின் பேட்டிங் மந்தமானது. எனினும் கடைசி ஓவரில் இலக்கை எட்டி ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. 

மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியதன் மூலம் இந்த சீசனில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ரோஹித் சர்மா பேட்டிங் ஆடியபோது கிருஷ்ணப்பா கௌதம் 10வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை அடிக்க ரோஹித் சர்மா இறங்கிவந்தார். உடனடியாக அவரை ஸ்டம்பிங்  செய்வதற்கு வசதியாக பந்தை வைடாக வீசினார் கௌதம். ஆனால் சுதாரித்துக்கொண்ட ரோஹித் சர்மா அந்த பந்தை காலால் தட்டிவிட்டார். கௌதம் ஸ்மார்ட்டாக செயல்பட நினைத்தார். ஆனால் அதைவிட ஸ்மார்ட்டாக செயல்பட்டு கௌதமின் திட்டத்தை முறியடித்தார் ரோஹித். அந்த வீடியோ இதோ..