நான் ஏன்டா வேற டீமை வழிநடத்தணும்..? MI ஒண்ணும் ஓவர்நைட்ல வளர்ந்த டீம் இல்ல..! ரோஹித் சர்மா அதிரடி
மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறந்த வீரர்களை பெற்றிருந்ததால் தான் ரோஹித் சர்மாவால் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல முடிந்தது என்று பேசியவர்களின் மூக்கை உடைத்துள்ளார் ரோஹித் சர்மா.
மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறந்த வீரர்களை பெற்றிருந்ததால் தான் ரோஹித் சர்மாவால் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல முடிந்தது என்று பேசியவர்களின் மூக்கை உடைத்துள்ளார் ரோஹித் சர்மா.
ஐபிஎல் 13வது சீசனில் ஐந்தாவது முறையாக டைட்டிலை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஐபிஎல்லில் கேப்டன்சி செய்யும் ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை.
எனவே ஐபிஎல்லை சுட்டிக்காட்டி இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோஹித்தை நியமிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்தன. இதற்கிடையே ரோஹித்தை மட்டம்தட்டும் விதமாக ஆகாஷ் சோப்ரா உள்ளிட்ட சில முன்னாள் வீரர்கள், மும்பை இந்தியன்ஸ் அணியில் மலிங்கா, பும்ரா, ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் அணியில் இருப்பதால்தான், ரோஹித்தால் ஐந்து முறை கோப்பையை வெல்ல முடிந்தது என வெதண்டாவதம் பேசினர்.
அப்படி பேசியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் ரோஹித் சர்மா. இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, நான் வேறு அணியை வழிநடத்தினால் இதேபோன்று வெற்றிகரமாக வழிநடத்தியிருக்க முடியுமா என்று சிலர் கேட்கிறார்கள். ஓவர்நைட்டில் வளர்ந்த டீம் அல்ல மும்பை இந்தியன்ஸ். மும்பை அணி தேவையில்லாத, ஏராளமான மாற்றங்களை செய்ய விரும்பாது. ரோஹித் சர்மா உட்பட அனைத்து வீரர்களுமே ஏலத்தில் எடுக்கப்பட்டவர்கள் தான். மும்பை அணி வீரர்களை ஏலத்தில் எடுத்து அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அணியை கட்டமைத்தது மும்பை அணி என்று ரோஹித் சர்மா தெரிவித்தார்.