ஐபிஎல் 13வது சீசன் பாதி கட்டத்தை கடந்துவிட்ட நிலையில், முதல் 7 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி, வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ஆர்சிபியை எதிர்கொள்கிறது.

அதேவேளையில், இந்த சீசனில் ஆர்சிபி அணி அருமையாக ஆடி வெற்றிகளை குவித்து ஆதிக்கம் செலுத்திவருகிறது. இதற்கு முந்தைய சீசன்களை போல அல்லாமல், வலுவான நிரந்தர அணி காம்பினேஷனை கட்டமைத்து, பெரியளவில் அணியில் மாற்றங்களை செய்யாமல் சிறப்பாக ஆடிவருகிறது. அந்தவகையில், இந்த போட்டியிலும் ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் ஆர்சிபி அணி களமிறங்கியுள்ளது.

ஆர்சிபி அணி:

ஆரோன் ஃபின்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, கிறிஸ் மோரிஸ், வாஷிங்டன் சுந்தர், இசுரு உடானா, நவ்தீப் சைனி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சீசனில் முதல் முறையாக இந்த போட்டியில் தான் களமிறங்குகிறார் கெய்ல். கெய்ல் சேர்க்கப்பட்டதால், முஜிபுர் ரஹ்மான் நீக்கப்பட்டுள்ளார்.

மந்தீப் சிங்கிற்கு பயிற்சியில் காயம் ஏற்பட்டதால் அவர் இந்த போட்டியில் ஆடவில்லை. பிரப்சிம்ரன் சிங்கும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கு பதிலாக தீபக் ஹூடா மற்றும் ரிஸ்ட் ஸ்பின்னர் முருகன் அஷ்வின் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:

கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), கிறிஸ் கெய்ல், மயன்க் அகர்வால், நிகோலஸ் பூரான், மேக்ஸ்வெல், தீபக் ஹூடா, கிறிஸ் ஜோர்டான், முகமது ஷமி, முருகன் அஷ்வின், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.