ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ஆர்சிபியை எதிர்கொண்டு ஆடிவருகிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

ஷார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர், ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியில் கோலி, டிவில்லியர்ஸ் உட்பட யாருமே சோபிக்கவில்லை. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது ஆர்சிபி.

தேவ்தத் படிக்கல்(5), கோலி(7) ஆகிய இருவரையும்  பவர்ப்ளேயிலேயே தனது அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தினார் சந்தீப் ஷர்மா. டிவில்லியர்ஸை 24 ரன்களில் ஷபாஸ் நதீம் வீழ்த்த, மறுமுனையில் நிலைத்து ஆடிக்கொண்டிருந்த இளம் வீரர் படிக்கல்லை 32 ரன்களுக்கு ரஷீத் கான் வீழ்த்தினார்.

அதன்பின்ன 18 பந்தில் 21 ரன்கள் அடித்து ஓரளவிற்கு நம்பிக்கையளித்த வாஷிங்டன் சுந்தரை நடராஜன் வீழ்த்த, மோரிஸை 3 ரன்களிலும் அதற்கடுத்த பந்தில் உடானாவையும்(0) ஹோல்டர் வீழ்த்த, 20 ஓவரில் வெறும் 120 ரன்களுக்கு சுருண்டது ஆர்சிபி அணி. 121 ரன்கள் என்பது சன்ரைசர்ஸுக்கு மிக எளிதான இலக்கு என்பதால் கண்டிப்பாக சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றுவிடும்.