ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக பார்த்திவ் படேலும் விராட் கோலியும் களமிறங்கினர். பார்த்திவ் படேலை 2வது ஓவரிலேயே கிறிஸ் மோரிஸ் வீழ்த்தினார். இதையடுத்து களத்திற்கு வந்த டிவில்லியர்ஸை 17 ரன்களில் ரபாடா வெளியேற்றினார். 

ஐபிஎல்லில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. மாலை 4 மணிக்கு தொடங்கிய போட்டியில் ஆர்சிபி அணியும் டெல்லி அணியும் ஆடிவருகின்றன. இரவு 8 மணிக்கு நடக்கும் போட்டியில் கேகேஆர் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.

இந்த சீசனில் இதுவரை 5 போட்டிகளில் ஆடி ஒன்றில் கூட வெற்றி பெறாத ஆர்சிபி அணி, முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் களமிறங்கியது. டெல்லி அணிக்கும் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டியது அவசியம். டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். 

ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக பார்த்திவ் படேலும் விராட் கோலியும் களமிறங்கினர். பார்த்திவ் படேலை 2வது ஓவரிலேயே கிறிஸ் மோரிஸ் வீழ்த்தினார். இதையடுத்து களத்திற்கு வந்த டிவில்லியர்ஸை 17 ரன்களில் ரபாடா வெளியேற்றினார். மார்கஸ் ஸ்டோய்னிஸும் 15 ரன்களில் வெளியேற, ஆர்சிபி அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. டெல்லி அணியின் பவுலர்கள், ஆர்சிபி அணியின் விக்கெட்டுகளை சரித்ததோடு, ரன்னையும் கட்டுப்படுத்தினர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் நின்று கொண்டிருந்த விராட் கோலி நிதானமாக ஆடிக்கொண்டிருந்தார்.

ஸ்டோய்னிஸின் விக்கெட்டுக்கு பிறகு களத்திற்கு வந்த மொயின் அலி அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார். ஆனால் அவரும் டெத் ஓவர்கள் வரை நிற்கவில்லை. 32 ரன்களில் மொயின் அலியும் 41 ரன்களில் கோலியும் வெளியேறினர். 18வது ஓவரில் கோலி, அக்‌ஷ்தீப் நாத், பவன் நேகி ஆகிய மூன்று விக்கெட்டுகளையும் ரபாடா வீழ்த்தினார். 20 ஓவர் முடிவில் 149 ரன்களை மட்டுமே எடுத்தது. 

பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் 150 ரன்கள் இலக்கு என்பது மிகவும் எளிதான இலக்கு. மேலும் இந்த ஸ்கோரை டிஃபெண்ட் பண்ணுவதற்கான பவுலர்கள் ஆர்சிபி அணியில் இல்லை. எனவே டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.