வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷனை கொண்டவர் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா. 

சர்வதேச அளவில் நம்பர் 1 பவுலராக திகழ்கிறார் பும்ரா. வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷனை கொண்ட பும்ரா, டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவர். குறிப்பாக மிக துல்லியமாக யார்க்கர்களை வீசுபவர். அவரது துல்லியமான யார்க்கர்களும் வேரியேஷனும் தான் அவர் டெத் ஓவர்களை சிறப்பாக வீசுவதற்கு காரணம். 

மும்பை இந்தியன்ஸ் அணி தான் பும்ராவின் திறமையை அடையாளம் கண்டு ஐபிஎல்லில் அவரை எடுத்தது. ஐபிஎல்லில் அபாரமாக வீசியதை அடுத்துத்தான் இந்திய அணியில் இடம்பிடித்தார் பும்ரா. மும்பை இந்தியன்ஸ் அணியின் நிரந்தர கோர் வீரர்களாக இருக்கும் ரோஹித், பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா வரிசையில் பும்ராவும் இருக்கிறார்.

பும்ராவை போலவே பவுலிங் ஆக்‌ஷனை பல சிறுவர்கள் ஏற்கனவே பெற்றிருப்பதை பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் 22 வயது கர்நாடக வீரரான மகேஷ் குமார் என்பவரும் பும்ராவை போலவே பந்துவீசுகிறார். ஆர்சிபி அணியில் இருக்கும் அவர், விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோருக்கு வலையில் பந்துவீசினார். அவரது பவுலிங் அப்படியே பும்ராவை போலவே உள்ளது. அவர் வலைப்பயிற்சியின் போது பந்துவீசிய வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. ஆர்சிபி அணி மற்றொரு பும்ராவை கண்டுபிடித்துள்ளது.