Asianet News TamilAsianet News Tamil

அஷ்வின் பண்ணது பெரிய தப்பு.. அப்படி பண்ணியிருக்கக்கூடாது!! இத்தனை வருஷமா ஆடிகிட்டு இருக்குற அஷ்வினுக்கு இதுகூட தெரியாதா..?

இந்த போட்டியில் பஞ்சாப் அணியால் அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட தமிழக ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார் சுனில் நரைன். 

punjab captain ashwin made a captaincy mistake in the match against kkr
Author
India, First Published Mar 28, 2019, 3:10 PM IST

ஐபிஎல்லில் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கொல்கத்தாவில் நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, உத்தப்பா - ராணா ஆகியோரின் பொறுப்பான அரைசதம் மற்றும் கடைசி நேர ரசலின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 218 ரன்கள் என்ற மெகா ஸ்கோரை அடித்தது. 

219 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் கெய்ல் ஆகியோர் முறையே 1 மற்றும் 20 ரன்களில் வெளியேறினர். அதன்பிறகு மயன்க் அகர்வால் அதிரடியாக ஆடி 34 பந்துகளில் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். சர்ஃபராஸ் கான் வெறும் 13 ரன்கள் மட்டுமே அடித்தார். அதன்பின்னர் டேவிட் மில்லரும் மந்தீப் சிங்கும் அதிரடியாக ஆடி கடைசி வரை போராடினர். எனினும் இலக்கு மிகவும் அதிகம் என்பதால் அவர்களால் எட்டமுடியவில்லை. பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 190 ரன்கள் மட்டும்தான் அடித்தது. இதையடுத்து கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

punjab captain ashwin made a captaincy mistake in the match against kkr

இந்த போட்டியில் பஞ்சாப் அணியால் அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட தமிழக ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார் சுனில் நரைன். மாயாஜால ஸ்பின்னர் என்று வருண் சக்கரவர்த்தியை எட்டரை கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி. இதையடுத்து அவர் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி ஆடிய முதல் போட்டியில் ஆடும் லெவனில் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், கேகேஆர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அணியில் இருந்தார். முதல் ஓவரை பஞ்சாப் அணி சார்பில் ஷமி வீச, இரண்டாவது ஓவரை வருணிடம் கொடுத்தார் கேப்டன் அஷ்வின். 

punjab captain ashwin made a captaincy mistake in the match against kkr

வருண் சக்கரவர்த்தி வீசிய அந்த ஓவரில் மூன்று சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உட்பட 24 ரன்களை குவித்தார் சுனில் நரைன். அந்த ஓவரில் லின் அடித்த சிங்கிளோடு சேர்த்து மொத்தம் 25 ரன்கள் அடிக்கப்பட்டது. ஸ்பின் பவுலிங்கை அபாரமாக ஆடி, ஸ்பின்னிற்கு எதிராக ஐபிஎல்லில் நல்ல ரெக்கார்டை வைத்துள்ள நரைன் களத்தில் இருக்கும்போது இரண்டாவது ஓவரிலேயே வருண் சக்கரவர்த்தியை பந்துவீச கேப்டன் அஷ்வின் அழைத்திருக்கக்கூடாது. 

பவர்பிளேயில் மட்டும் ஸ்பின் பவுலிங்கில் 259 ரன்களை குவித்துள்ள சுனில் நரைன், இதுவரை வெறும் 3 முறை மட்டுமே ஸ்பின் பவுலிங்கில் அவுட்டாகியிருக்கிறார். அப்படியிருக்கையில், சுனில் நரைனுக்கு வருண் சக்கரவர்த்தியை இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே பந்துவீச வைத்தது தவறான செயல். 

punjab captain ashwin made a captaincy mistake in the match against kkr

வருணின் பவுலிங்கை இரண்டாவது ஓவரிலேயே தாறுமாறாக அடித்தபோதே கொல்கத்தா அணி உத்வேகமடைந்தது. அதே உத்வேகத்துடன் இறுதிவரை ஆடியது. அந்த வகையில் நரைனின் ஆட்டம் அந்த அணியின் அடித்தளமாக அமைந்துவிட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios