ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கடந்த சனிக்கிழமை தொடங்கி நடந்துவருகிறது. இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலுமே வென்று தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

இதுவரை ஆடிய ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கும் கேகேஆர் அணியும் பஞ்சாப் அணியும் இன்று மோதுகின்றன. சன்ரைசர்ஸை வீழ்த்தி கேகேஆர் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளன. 

தலா ஒரு வெற்றியை பெற்றிருக்கும் இரு அணிகளும் இரண்டாவது போட்டியில் வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன. தினேஷ் கார்த்திக் தலைமையிலான கேகேஆர் அணியும் அஷ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதும் போட்டி இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.

 

பஞ்சாப்பை எதிர்த்து களமிறங்கும் உத்தேச கேகேஆர் அணி:

கிறிஸ் லின், சுனில் நரைன், உத்தப்பா, ராணா, தினேஷ் கார்த்திக்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், அண்ட்ரே ரசல், குல்தீப் யாதவ், பியூஷ் சாவ்லா, ஃபெர்குசன், பிரசித் கிருஷ்ணா.

சன்ரைசர்ஸுக்கு எதிராக ஆடிய அதே அணிதான் இன்றும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு வீரர்களை பொறுத்தமட்டில், அந்த அணியின் கோர் வீரர்களான லின், சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல் ஆகிய மூவருடன் கடந்த போட்டியில் ஆடிய நியூசிலாந்து வீரர் ஃபெர்குசனே இந்த போட்டியிலும் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.