ஐபிஎல் 2020ன் பெஸ்ட் வெளிநாட்டு லெவன்..!

ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் பொம்மி பாங்வா ஐபிஎல் 13வது சீசனின் சிறந்த வெளிநாட்டு லெவனை தேர்வு செய்துள்ளார்.
 

pommie mbangwa picks ipl 2020 best overseas eleven

ஐபிஎல் 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், பல்வேறு சவால்களை கடந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.

ஐபிஎல் 13வது சீசனில் சிறப்பாக ஆடிய 11 வீரர்களை பல முன்னாள் வீரர்கள் தேர்வு செய்த நிலையில், ஜிம்பாப்வே முன்னாள் வீரர் பொம்மி பாங்வா, சிறந்த 11 வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்துள்ளார். அந்த அணியின் கேப்டனாக கேகேஆர் அணியின் கேப்டன் இயன் மோர்கனை தேர்வு செய்துள்ளார்.

தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் டி காக் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். டிவில்லியர்ஸ், இயன் மோர்கன், பட்லர் ஆகியோரையும் ஆல்ரவுண்டர்களாக பொல்லார்டு மற்றும் மோரிஸ் ஆகியோரையும் ஸ்பின்னராக ரஷீத் கானையும் ஃபாஸ்ட் பவுலர்களாக ஆர்ச்சர், போல்ட் மற்றும் ரபாடா ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார் பொம்மி.

பொம்மி தேர்வு செய்த ஐபிஎல் 2020ன் சிறந்த லெவன்: 

டேவிட் வார்னர், டி காக், டிவில்லியர்ஸ், இயன் மோர்கன்(கேப்டன்), பட்லர், பொல்லார்டு, கிறிஸ் மோரிஸ், ரஷீத் கான், ஆர்ச்சர், டிரெண்ட் போல்ட், ரபாடா.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios