மும்பை இந்தியன்ஸ் அணி 3 முறை கோப்பையை வென்றபோதும் அதில் அபாரமான பங்களிப்பு செய்தவர்களில் ஒருவர் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் பொல்லார்டு. ஆனால் அவர் கடந்த சீசனில் சரியாக ஆடவில்லை. மும்பை அணியின் நட்சத்திர வீரரான பொல்லார்டு சரியாக ஆடாததும் அவர் ஒரு காரணம். 

3 முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, கடந்த சீசன் சிறப்பாக அமையவில்லை. கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்குக்கூட தகுதி பெறவில்லை. அதனால் இந்த சீசனில் சிறப்பாக ஆடும் முனைப்பில் களம் கண்டது. 

முதல் 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அந்த அணி 3 முறை கோப்பையை வென்றபோதும் அதில் அபாரமான பங்களிப்பு செய்தவர்களில் ஒருவர் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் பொல்லார்டு. ஆனால் அவர் கடந்த சீசனில் சரியாக ஆடவில்லை. மும்பை அணியின் நட்சத்திர வீரரான பொல்லார்டு சரியாக ஆடாததும் அவர் ஒரு காரணம்.

அதிரடியான பேட்டிங், நல்ல பவுலிங், அபாரமான ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் பங்களிப்பு செய்யக்கூடியவர் பொல்லார்டு. ஒன்றில் இல்லாவிட்டாலும் மற்றொன்றில் தனது சிறப்பான பங்களிப்பை செய்துவிடுவார். ஆனால் கடந்த சீசனில் சரியாக ஆடாத நிலையில், இந்த சீசனில் நன்றாகவே ஆடிவருகிறார். 

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18 ஓவர் முடிவில் வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் கடைசி இரண்டு ஓவர்களில் பொல்லார்டும் பாண்டியாவும் இணைந்து சிஎஸ்கே பவுலிங்கை அடித்து நொறுக்கினர். கடைசி 2 ஓவர்களில் மட்டும் 45 ரன்கள் குவிக்கப்பட்டன. பொல்லார்டு தனது பங்கிற்கு 7 பந்துகளில் 17 ரன்கள் அடித்தார். 

பேட்டிங்கில் பங்களிப்பு செய்ததோடு மட்டுமல்லாமல் இரு கேட்ச்களையும் பிடித்தார். வாட்சனின் கேட்ச்சை பிடித்தார். பின்னர் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ரெய்னாவின் கேட்ச்சை டீப் கவர் திசையில் பவுண்டரி லைனில் அபாரமாக தாவி ஒற்றை கையில் பிடித்தார் பொல்லார்டு. பொல்லார்டை தவிர வேறு எந்த வீரராக இருந்தாலும் பிடித்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். அப்படியான கேட்ச் அது. அந்த பந்தை அடித்த ரெய்னா, அது சிக்ஸர் என உறுதியாக நம்பினார். ஆனால் அதை அபாரமாக கேட்ச் செய்தார் பொல்லார்டு. ரெய்னாவின் விக்கெட் மிக முக்கியமானது. அந்த வீடியோ இதோ..