Asianet News TamilAsianet News Tamil

ஆர்சிபி அணியில் இணையும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர்.. உற்சாகத்தில் கோலி&கோ

முதல் நான்கு போட்டிகளிலும் தோற்ற ஆர்சிபி, கேகேஆர் அணியை நேற்று எதிர்கொண்டது. ஆர்சிபி நிர்ணயித்த 206 ரன்கள் என்ற இலக்கை ஆண்ட்ரே ரசலின் கடைசி நேர காட்டடியால் எளிதாக எட்டி வெற்றி பெற்றது கேகேஆர் அணி.
 

nathan coulter nile might be joined in rcb on april 13
Author
India, First Published Apr 6, 2019, 1:31 PM IST

ஐபிஎல்லில் இதுவரை 11 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. 12வது சீசன் நடந்துவருகிறது. ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கி ஏமாற்றத்துடன் தொடரை முடிக்கிறது. 

விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய இரு ஜாம்பவான்கள் ஒரு அணியில் இருந்தும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்குக்கூட தகுதி பெறவில்லை. கடந்த சீசன் மோசமாக இருந்த நிலையில், இந்த சீசனிலாவது கோப்பையை வென்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு, சிஎஸ்கேவிடம் தொடங்கிய தோல்வி முகம் இன்னும் தொடர்கிறது. 

முதல் நான்கு போட்டிகளிலும் தோற்ற ஆர்சிபி, கேகேஆர் அணியை நேற்று எதிர்கொண்டது. ஆர்சிபி நிர்ணயித்த 206 ரன்கள் என்ற இலக்கை ஆண்ட்ரே ரசலின் கடைசி நேர காட்டடியால் எளிதாக எட்டி வெற்றி பெற்றது கேகேஆர் அணி.

இந்த சீசனில் பெரும் எதிர்பார்ப்புடன் அணியில் எடுக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஹெட்மயர், முதல் நான்கு போட்டிகளில் ஒன்றில் கூட சரியாக ஆடவில்லை. அவரை பெரிதும் நம்பி எடுத்த ஆர்சிபி அணிக்கு கடும் ஏமாற்றத்தை மட்டுமே அளித்தார். 

nathan coulter nile might be joined in rcb on april 13

மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் நாதன் குல்ட்டர்நைல் ஆகிய இருவரும் ஆர்சிபி அணியில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுடன் ஒருநாள் தொடர் ஆடியதால் முதல் 3 போட்டிகளில் அவர்கள் ஆடமுடியவில்லை. அந்த தொடர் முடிந்ததும் உடனடியாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஐபிஎல்லில் ஆட இந்தியா வந்தார். கடந்த இரண்டு போட்டிகளிலும் அவர் ஆர்சிபி அணிக்காக ஆடினார். ஆனால் நாதன் குல்ட்டர்நைல் பாகிஸ்தான் தொடர் முடிந்ததும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்டார். 

nathan coulter nile might be joined in rcb on april 13

இந்நிலையில், அவர் வரும் 13ம் தேதி ஐபிஎல்லில் ஆடுவதற்காக இந்தியா வருவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின்னர் நடக்கும் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக ஆடுவார் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. இனிமேல் அவர் மட்டும் ஒரு பிரயோஜனமுமில்லை. ஏனென்றால் தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்துள்ள ஆர்சிபி, இனிமேல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பே இல்லை. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios