11 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளை பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கடைசியாக இருக்கும் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க, வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸை இன்று எதிர்கொள்கிறது.

அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியிலும் ரோஹித் சர்மா ஆடவில்லை. தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சிஎஸ்கேவிற்கு எதிரான கடந்த போட்டியில் ஆடாத மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, இந்த போட்டியிலும் ஆடவில்லை. அதனால் பொல்லார்டு தான் இந்த போட்டியிலும் கேப்டன்சி செய்கிறார். டாஸ் வென்ற பொல்லார்டு, பேட்டிங்கை தேர்வு செய்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் குல்ட்டர்நைல் நீக்கப்பட்டு, ஜேம்ஸ் பாட்டின்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

டி காக்(விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, பொல்லார்டு(கேப்டன்), ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட், பும்ரா.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

பென் ஸ்டோக்ஸ், ராபின் உத்தப்பா, சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷ்ரேயாஸ்  கோபால், அங்கித் ராஜ்பூத், கார்த்திக் தியாகி.