ஐபிஎல்லில் தான் ஓரங்கட்டப்பட்ட விரக்தியில் இருந்த மனோஜ் திவாரி, இந்த சீசனில் சிறப்பாக ஆடிய 11 வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார்.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் ராகுலை தேர்வு செய்துள்ள மனோஜ் திவாரி, ஐந்தாவது முறையாக இந்த சீசனில் கோப்பையை வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித்தையே கேப்டனாக தேர்வு செய்துள்ளார். சூர்யகுமார், டிவில்லியர்ஸ் ஆகியோரை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாகவும், ஹர்திக் பாண்டியா மற்றும் பொல்லார்டு ஆகியோரை ஃபினிஷர்களாகவும் க்ருணல் பாண்டியா மற்றும் ரஷீத் கானை ஸ்பின்னர்களாகவும் தேர்வு செய்துள்ளார்.

ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஆர்ச்சருடன், 3வது ஃபாஸ்ட் பவுலராக இந்த சீசனில் மிகச்சிறப்பாக பந்துவீசி தனது துல்லியமான யார்க்கர்களின் மூலம் அனைவரின் பாராட்டையும் பெற்றதுடன், இந்திய அணியிலும் இடம்பிடித்த டி.நடராஜனை தேர்வு செய்துள்ளார்.

மனோஜ் திவாரி தேர்வு செய்த ஐபிஎல் 2020ன் சிறந்த லெவன்:

ரோஹித் சர்மா(கேப்டன்), கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், டிவில்லியர்ஸ், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, ரஷீத் கான், ஆர்ச்சர், பும்ரா, நடராஜன்.