ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் சிஎஸ்கே, கேகேஆர், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. 

இந்த சீசனை மந்தமாக தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்று உத்வேகமடைந்துள்ளது. நான்காவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் ராஜஸ்தான் அணியுடன் ஆடிவருகிறது. 

இதுவரை ஆடிய 6 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ள ராஜஸ்தான் அணி, இரண்டாவது வெற்றியை பெறும் முனைப்பில் வலுவான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஆடுகிறது. ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்துவரும் நிலையில், அவர் ஒன்றிரண்டு இன்னிங்ஸை தவிர வேறு பெரிதாக ஏதும் ஆடவில்லை. 

பொல்லார்டு ஃபார்முக்கு திரும்பியிருப்பதால் மும்பை இந்தியன்ஸின் பேட்டிங் ஆர்டர் வலுவடைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பும்ரா, பெஹ்ரெண்டோர்ஃப், அல்ஸாரி ஜோசப் என ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டும் வலுவாக உள்ளது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே வலுவாக திகழும் மும்பை இந்தியன்ஸை வீழ்த்துவது ராஜஸ்தானுக்கு எளிதான காரியம் அல்ல. எனினும் வெற்றி கட்டாயத்துடன் ஆடுவதால் வெற்றிக்கு அந்த அணி போராடும். 

ராஜஸ்தான் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸுக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் ஆடிய ரியான் பராக்கிற்கு பதிலாக கிருஷ்ணப்பா கௌதம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ரஹானே(கேப்டன்), பட்லர், சாம்சன், ஸ்மித், திரிபாதி, லிவிங்ஸ்டோன், கிருஷ்ணப்பா கௌதம், ஆர்ச்சர், ஷ்ரேயாஸ் கோபால், உனாத்கத், குல்கர்னி.