ஐபிஎல் 13வது சீசனில் பிளே ஆஃபிற்கு மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகளும் கிட்டத்தட்ட முன்னேறிவிட்ட நிலையில், 4ம் இடத்திற்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் கேகேஆர் மற்றும் பஞ்சாப் அணிகள் இன்று மோதுகின்றன.

நீயா நானா என்று இந்த இரு அணிகளும் மோதும் இந்த போட்டி ஷார்ஜாவில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங்கை தேர்வு செய்தார்.

ஷார்ஜா பிட்ச்சில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. பிட்ச் ஸ்லோவாகத்தான் இருக்கும். எனவே முதலில் பேட்டிங் ஆடும் அணிக்கு, எந்த ஸ்கோர் போதுமானதாக இருக்கும் என்பதை தீர்மானிப்பது கடினமாக இருக்கும். 2வது இன்னிங்ஸில் பனி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், டாஸ் வெல்லும் அணி, ஃபீல்டிங்கை தேர்வு செய்து, இலக்கை விரட்டுவது நல்லது என்று பிட்ச் ரிப்போர்ட்டில் குமார் சங்கக்கரா தெரிவித்தார்.

அதே காரணத்தை கூறித்தான் ராகுல் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார். எனவே இலக்கை விரட்டும் பஞ்சாப்பின் முடிவு சரியானது. டாஸ் தோற்ற கேகேஆர் கேப்டன் மோர்கனும், தான் டாஸ் ஜெயித்திருந்தால் ஃபீல்டிங் தான் தேர்வு செய்திருப்பேன் என்றார்.

இரு அணிகளிலுமே எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவனுடன் தான் களமிறங்கியுள்ளன. 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:

கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மந்தீப் சிங், கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரான், மேக்ஸ்வெல், கிறிஸ் ஜோர்டான், தீபக் ஹூடா, ரவி பிஷ்னோய், முருகன் அஷ்வின், அர்ஷ்தீப் சின், முகமது ஷமி.

கேகேஆர் அணி:

ஷுப்மன் கில், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), இயன் மோர்கன்(கேப்டன்), பாட் கம்மின்ஸ், சுனில் நரைன், நாகர்கோட்டி, வருண் சக்கரவர்த்தி, லாக்கி ஃபெர்குசன், பிரசித் கிருஷ்ணா.