Asianet News TamilAsianet News Tamil

எப்போதும் ஏதாவது ஒரு காரணம் சொல்லிகிட்டே இருக்க முடியாது.. தோல்விக்கு பின் கோலி காட்டம்

நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியின் சோகம் தொடர்கிறது. தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ளது ஆர்சிபி அணி. 
 

kohli reveals his discontent after losing match against delhi capitals
Author
Bangalore, First Published Apr 8, 2019, 11:02 AM IST

நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியின் சோகம் தொடர்கிறது. தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ளது ஆர்சிபி அணி. 

இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத ஆர்சிபி அணி, நடந்துவரும் 12வது சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது. ஆனால் முதல் போட்டியிலேயே வெறும் 70 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி சிஎஸ்கேவிடம் பரிதாபமாக தோற்றது. அதன்பின்னர் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கேகேஆர் ஆகிய அணிகளிடம் தொடர்ச்சியாக தோல்வியடைந்தது. 

முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் டெல்லி கேபிடள்ஸ் அணியை எதிர்கொண்ட ஆர்சிபி அணிக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. டெல்லி அணியிடமும் தோல்வியை தழுவி, முதல் வெற்றியை கூட பதிவு செய்ய முடியாமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது ஆர்சிபி அணி. 

kohli reveals his discontent after losing match against delhi capitals

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி, பார்த்திவ் படேல், டிவில்லியர்ஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மொயின் அலி, அக்‌ஷ்தீப் நாத் என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ஸ்டோய்னிஸ் மற்றும் மொயின் அலி ஆகிய இருவரும் அடித்து ஆடி ஓரளவிற்கு அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினர். நிதானமாக ஆடிய கோலி, அடித்து ஆட ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ரபாடாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து ஆர்சிபி அணி, 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

150 ரன்கள் என்ற இலக்கை ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்பான பேட்டிங்கால் கடினமில்லாமல் எட்டி வெற்றி பெற்றது டெல்லி கேபிடள்ஸ் அணி. இந்த போட்டியிலும் தோல்வியடைந்ததை அடுத்து விரக்தியடைந்த ஆர்சிபி கேப்டன் கோலி, ஒவ்வொரு முறையும் தோல்விக்கு ஏதாவது காரணம் சொல்லிக்கொண்டே இருக்க முடியாது என்று காட்டமாகவும் அதிருப்தியுடனும் தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios