ராகுலும் சர்ஃபராஸும் பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாகத்தான் ஆடினர். ஆனால் களத்தில் நின்று போட்டியை வெற்றிகரமாக முடிக்க வேண்டிய கடைசி நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்துவிட்டனர். அதிலும் ராகுல் 18வது ஓவரிலேயே ஆட்டமிழந்துவிட்டார். அவர் அவுட்டாகவில்லை என்றால், பஞ்சாப் அணி வெற்றி பெற்றிருக்கலாம்.  

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வாட்சன் 26 ரன்களில் அஷ்வினிடம் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த டுபிளெசிஸ் மற்றும் ரெய்னா ஆகிய இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் அஷ்வின் வீழ்த்தினார். அதன்பின்னர் தோனியும் ராயுடுவும் இணைந்து மிடில் ஓவர்களில் நிதானமாக ஆடினர். வழக்கம்போலவே டெத் ஓவர்கள் வரை நிதானமாக இருந்த தோனி, கடைசி 2 ஓவர்களில் அடித்து ஆடி ரன்னை உயர்த்தினார். 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 160 ரன்கள் எடுத்தது. 

161 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் கெய்ல் மற்றும் மயன்க் அகர்வாலை தனது அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தினார் ஹர்பஜன் சிங். பவர்பிளேயிலேயே கெய்ல் மற்றும் அகர்வாலை வீழ்த்திவிட்டார். அதன்பின்னர் ராகுலும் சர்ஃபராஸ் கானும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். ஆனால் 18வது ஓவரில் ராகுலும் 19வது மில்லரும் கடைசி ஓவரில் சர்ஃபராஸும் ஆட்டமிழந்ததால் அந்த அணி 138 ரன்களை மட்டுமே எடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

ராகுலும் சர்ஃபராஸும் பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாகத்தான் ஆடினர். ஆனால் களத்தில் நின்று போட்டியை வெற்றிகரமாக முடிக்க வேண்டிய கடைசி நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்துவிட்டனர். அதிலும் ராகுல் 18வது ஓவரிலேயே ஆட்டமிழந்துவிட்டார். அவர் அவுட்டாகவில்லை என்றால், பஞ்சாப் அணி வெற்றி பெற்றிருக்கலாம். 

தோனியின் கையிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய ராகுல், அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவரது அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க தவறிவிட்டார். ராகுலும் சர்ஃபராஸும் பேட்டிங் ஆடியபோது, ஜடேஜா வீசிய 13வது ஓவரின் நான்காவது பந்தை பின்பக்கம் தட்ட முயன்றார் ராகுல். ஆனால் பந்து பக்கத்திலேயே தான் கிடந்தது. அதை பார்க்காமல் ரன் ஓட முயன்றார் ராகுல். அவர் ஓட முயன்று திரும்புவதற்குள்ளாக, பந்தை விரைந்து எடுத்து ஸ்டம்பில் அடித்தார் தோனி. ராகுல் கிரீஸுக்குள் வருவதற்குள்ளாக தோனி ஸ்டம்பை அடித்துவிட்டார். ஆனால் ஸ்டிக் கீழே விழவில்லை. அதனால் ராகுல் தப்பினார். இதுமாதிரியான அதிர்ஷ்டங்கள் எல்லாம் எப்போதாவதுதான் கிடைக்கும். அதை சரியாக பயன்படுத்தி அணிக்கு வெற்றி தேடிக்கொடுக்காமல் அரைசதம் கடந்ததும் அவுட்டாகிவிட்டார் ராகுல்.

தோனி பண்ண அந்த ரன் அவுட் வீடியோ இதோ..