ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் புள்ளி பட்டியலில் 3 மற்றும் 4ம் இடங்களில் இருக்கும் அணிகளான ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் மோதுகின்றன.  அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் இயன் மோர்கன், பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இந்த போட்டிக்கான கேகேஆர் அணியில் 2 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆண்ட்ரே ரசல் காயத்தால் அவதிப்படுவதால், அவருக்கு பதிலாக டாம் பாண்ட்டன் சேர்க்கப்பட்டுள்ளார். ரசல் இந்த சீசனில் பேட்டிங்கில் பெரிதாக சோபிக்காமல் சொதப்பிவரும் நிலையில், அவரது இழப்பு கேகேஆரை பெரியளவில் பாதிக்காது. மேலும் இளம் ஃபாஸ்ட் பவுலர் ஷிவம் மாவிக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டுள்ளார்.

கேகேஆர் அணி:

ஷுப்மன் கில், டாம் பாண்ட்டன், நிதிஷ் ராணா, இயன் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ராகுல் திரிபாதி, பாட் கம்மின்ஸ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், லாக்கி ஃபெர்குசன், வருண் சக்கரவர்த்தி.

ஆர்சிபி அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஷாபாஸ் அகமது நீக்கப்பட்டு, ஃபாஸ்ட் பவுலர் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆர்சிபி அணி:

ஆரோன் ஃபின்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), குர்கீரத் சிங் மன், வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ், இசுரு உடானா, நவ்தீப் சைனி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.