ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் கேகேஆரும் மோதுகின்றன. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் இயன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தினேஷ் கார்த்திக் கேகேஆர் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள இயன் மோர்கன் தலைமையில் கேகேஆர் அணி களம் காண்கிறது. கேகேஆர் அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த போட்டியில் தொடக்க வீரராக இறங்கிய டாம் பாண்ட்டன் நீக்கப்பட்டு, கிறிஸ் க்ரீன் சேர்க்கப்பட்டுள்ளார். கில் மற்றும் திரிபாதி தொடக்க ஜோடி சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், கடந்த போட்டியில் டாம் பாண்ட்டனை, கில்லுடன் தொடக்க வீரராக இறக்கிய முயற்சி தோல்வியில் முடியவே, அவரை நீக்கிவிட்டு கிறிஸ் க்ரீனை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக எடுத்துள்ளனர்.

மேலும், இந்தியாவை சேர்ந்த இளம் ஃபாஸ்ட் பவுலர் நாகர்கோட்டிக்கு ஓய்வளிக்கப்பட்டு, கடந்த ஒருசில போட்டிகளில் ஓய்வில் இருந்த மற்றொரு இளம் ஃபாஸ்ட் பவுலரான ஷிவம் மாவி சேர்க்கப்பட்டுள்ளார்.

கேகேஆர் அணி:

ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, ஷுப்மன் கில், நிதிஷ் ராணா, இயன் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், கிறிஸ் க்ரீன், பாட் கம்மின்ஸ், ஷிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜேம்ஸ் பாட்டின்சன் நீக்கப்பட்டு, நேதன் குல்ட்டர்நைல் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, நேதன் குல்ட்டர்நைல், ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட், பும்ரா.