Asianet News TamilAsianet News Tamil

2வது ஓவரிலேயே போட்டியை தன்வசமாக்கிய நரைன்.. இந்த சீசனின் மிகப்பெரிய வெற்றி!! தெறிக்கவிட்ட கேகேஆர்.. ராஜஸ்தானுக்கு தொடரும் சோகம்

140 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் கிறிஸ் லின்னும் சுனில் நரைனும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 

kkr beat rajasthan royals easily and registered big victory in this season so far
Author
Jaipur, First Published Apr 8, 2019, 9:55 AM IST

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி, ஆக்ரோஷமே இல்லாமல் மிகவும் சாதாரணமாக பேட்டிங் ஆடி சாதாரணமாக ஸ்கோருடன் இன்னிங்ஸை முடித்தது. ரஹானே வெறும் 5 ரன்களுக்கு இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். பின்னர் பட்லருடன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நன்றாக ஆடிய நிலையில், பட்லர் 37 ரன்களில் கேகேஆர் அணியில் அறிமுகமான கர்னியிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். 

திரிபாதி 6 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் ஸ்மித், நிதானமாகவும் அதேநேரத்தில் அவ்வப்போது சில ஷாட்டுகளையும் அடித்து ரன்களை உயர்த்தினார். இந்த சீசனில் முதன்முறையாக அரைசதம் அடித்த ஸ்மித் 73 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பென் ஸ்டோக்ஸ் மந்தமாக ஆடி 14 பந்துகளில் வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி வெறும் 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

140 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் கிறிஸ் லின்னும் சுனில் நரைனும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் ஓவரில் லின் 2 பவுண்டரிகள் அடித்தார். கிருஷ்ணப்பா கௌதம் வீசிய இரண்டாவது ஓவரில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 22 ரன்களை குவித்தார் சுனில் நரைன். இரண்டாவது ஓவரிலேயே ஆட்டத்தை ராஜஸ்தான் ராயல்ஸிடம் இருந்து பறித்துவிட்டார் நரைன். அதன்பின்னரும் இருவரும் அதிரடியாக ஆடினர். பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி கேகேஆர் அணி 65 ரன்களை குவித்தது. 

kkr beat rajasthan royals easily and registered big victory in this season so far

லின்னும் நரைனும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 91 ரன்களை குவித்தனர். நரைன் 47 ரன்களிலும் லின் அரைசதம் கடந்த மாத்திரத்திலேயும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ஆட்டத்தை கையில் எடுத்த உத்தப்பா, 16 பந்துகளில் 26 ரன்கள் அடித்தார். நரைன், லின், உத்தப்பா ஆகியோரின் அதிரடியால் 14வது ஓவரிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது கேகேஆர் அணி. 

இந்த சீசனில் இதுவரை நடந்த போட்டிகளில் விரைவில் இலக்கை எட்டி அடையப்பட்ட வெற்றி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 5 போட்டிகளில் ஆடி 4 வெற்றிகளை பெற்றுள்ள கேகேஆர் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 5 போட்டிகளில் ஆடி ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ள ராஜஸ்தான் அணி கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios