ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஷார்ஜாவில் நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதின. போட்டி நடந்த ஷார்ஜா மைதானம் சிறியது என்பதால், பெரிய ஸ்கோர் மேட்ச்சாக இது அமைந்தது.

முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி, தொடக்க வீரர் மயன்க் அகர்வாலின் அதிரடி சதம்(50 பந்தில் 106 ரன்கள்), ராகுலின் அதிரடி அரைசதம்(69 ரன்கள்) மற்றும் கடைசி நேர பூரானின் அதிரடியால் 20 ஓவரில் 223 ரன்களை குவித்தது பஞ்சாப் அணி. 224 ரன்கள் என்ற கடின இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன் மற்றும் ராகுல் டெவாட்டியா ஆகியோரின் அதிரடி அரைசதத்தால் வெற்றிகரமாக விரட்டி, ஐபிஎல் வரலாற்றில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கின் போது, முருகன் அஷ்வின் வீசிய 8வது ஓவரின் 3வது பந்தை சஞ்சு சாம்சன், மிட் விக்கெட் திசையில் தூக்கியடிக்க, கிட்டத்தட்ட சிக்ஸருக்கே சென்றுவிட்ட அந்த பந்தை பவுண்டரி லைனுக்குள் டைவ் அடித்து பிடித்து, கீழே விழுவதற்கு முந்தைய நொடி, பந்தை பவுண்டரி லைனுக்கு வெளியே வீசினார்.

ஜாண்டி ரோட்ஸ், பாண்டிங், சைமண்ட்ஸ், ஜடேஜா, ரெய்னா, மார்டின் கப்டில் என எத்தனையோ மிகச்சிறந்த ஃபீல்டர்கள் அருமையான ஃபீல்டிங் செய்து பார்த்திருக்கிறோம். ஆனால் பூரான் நேற்று செய்த அந்த குறிப்பிட்ட ஃபீல்டிங், கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகச்சிறந்தது என பல ஜாம்பவான்கள் பாராட்டிவருகின்றனர். சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்க்கையிலேயே தான் பார்த்ததில் இதுதான் சிறந்தது என பூரானை பாராட்டியிருக்கிறார்.

அதற்கு காரணம், கிட்டத்தட்ட சிக்ஸர் சென்றுவிட்ட பந்தை பவுண்டரி லைனுக்குள் டைவ் அடித்து பிடித்தது மட்டுமல்லாது, பவுண்டரி லைனுக்குள் விழுந்தால் எதிரணிக்கு சிக்ஸர் கிடைத்துவிடும் என்பதால், கீழே விழுவதற்கு முன் செம டைமிங்கில் பந்தை வெளியே வீசினார் பூரான். சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் பெஸ்ட் ஃபீல்டரும் பஞ்சாப் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளருமான ஜாண்டி ரோட்ஸே வியந்துபோய், எழுந்து நின்று கைதட்டினார். அந்த வீடியோ இதோ..

இவ்வளவுக்கும் அவர் தொழில் முறை விக்கெட் கீப்பர். ஒரு விக்கெட் கீப்பரான அவர் செய்த ஃபீல்டிங், மிகவும் அபாரமானது.