ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளில் ஒன்று சிஎஸ்கே. தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, 3 முறை கோப்பையை வென்றுள்ளது. நடந்துவரும் 12வது சீசனிலும் ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறது. 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

சிஎஸ்கே அணி வெற்றிகரமான அணியாக திகழ, அந்த அணியின் கேப்டனும் உலகின் சிறந்த ஃபினிஷருமான தோனி மிக முக்கிய காரணம். ஒரு கேப்டனாகவும் பெஸ்ட் ஃபினிஷராகவும் சிஎஸ்கே அணிக்கு வெற்றிகளை குவித்து கொடுத்துள்ளார் தோனி.

அதனால் தோனியை சிஎஸ்கே ரசிகர்கள் செல்லமாக தல தல என்று அழைக்கிறார்கள். தோனியும் தன் மீதான எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் கடந்த சீசனிலும் சரி, இந்த சீசனிலும் சரி சிறப்பாக ஆடிவருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில், உனாத்கத்தின் கடைசி ஓவரை பொளந்துகட்டி சிறப்பாக ஃபினிஷ் செய்த நிலையில், நேற்றும் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற செய்தார். வெற்றிகரமாக அவரே களத்தில் நின்று போட்டியை முடிக்கவில்லை என்றாலும், வெற்றிக்கு காரணமாக இருந்தார். கடைசி ஓவரில் ஸ்டோக்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். 

டெத் ஓவர்களில் அடித்து நொறுக்கும் வல்லமையுடைய தோனியையே டெத் ஓவர்களில் சிறப்பாக கட்டுப்படுத்தினார் ஜோஃப்ரா ஆர்ச்சர். கிரிக்கெட் உலகில் கெத்தாக வலம்வந்துகொண்டிருக்கும் தோனியை, ஒரு அபாரமான பவுன்ஸரில் தலையில் அடித்தார் ஆர்ச்சர். 17வது ஓவரின் நான்காவது பந்தை அபாரமான பவுன்ஸராக வீசினார் ஆர்ச்சர். அந்த பந்தை தடுத்த ஆடமுடியாமல் தலையில் அடி வாங்கினார் தோனி. தோனியின் தலையில் பவுன்ஸரால் அடிப்பதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. அந்த பவுன்ஸர் வீடியோ இதோ..