Asianet News TamilAsianet News Tamil

சிஎஸ்கே-வை எச்சரித்து வையுங்க..! ஒன்றுதிரண்ட ஐபிஎல் அணிகள்

சிஎஸ்கே அணி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற அறிவுறுத்துமாறு பிசிசிஐக்கு மற்ற ஐபிஎல் அணிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
 

ipl franchises emphasis bcci to warn csk to follow sop
Author
Dubai - United Arab Emirates, First Published Aug 30, 2020, 4:16 PM IST

ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே வீரர்கள் இருவர் உட்பட அணியின் உதவியாளர்கள், நிர்வாகிகள் சிலருக்கு என மொத்தம் 10 பேருக்கும் மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சிஎஸ்கே அணி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கிளம்புவதற்கு முன்பாக, சென்னையில் 5 நாட்கள் பயிற்சி முகாம் நடத்தியது. சிஎஸ்கே அணியை தவிர வேறு எந்த அணியும் இந்தியாவில் பயிற்சி முகாம் நடத்தவில்லை. இந்நிலையில், சிஎஸ்கே அணி வீரர்கள் தீபக் சாஹர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் உட்பட 10 பேருக்கு மேல் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ipl franchises emphasis bcci to warn csk to follow sop

அதனால் சிஎஸ்கே அணி பயிற்சியை தொடங்குவது தாமதமாகியிருப்பதுடன், கொரோனா அச்சுறுத்தலும் அதிகமாகியுள்ளது. இது சிஎஸ்கேவிற்கு மட்டுமல்லாது மற்ற அணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற சிஎஸ்கே அணிக்கு எச்சரிக்கை விடுக்குமாறு பிசிசிஐக்கு மற்ற அணிகள் கோரிக்கை விடுத்துள்ளது. 

சிஎஸ்கேவைத்தவிர மற்ற எந்த அணியுமே, இந்தியாவில் பயிற்சி முகாமை நடத்தவில்லை. அதுமட்டுமல்லாது, சிஎஸ்கே வீரர்கள் தனிமனித இடைவெளியையும் பின்பற்றவில்லை. தோனி, ரெய்னா ஓய்வு அறிவித்த அன்றைக்கு, அனைவரும் கட்டிப்பிடித்து நெகிழ்ந்தனர். சிஎஸ்கே அணியினருக்கு கொரோனா இருப்பது, மற்ற அணிக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற சிஎஸ்கே அணியை கண்டிப்புடன் எச்சரிக்குமாறு பிசிசிஐக்கு மற்ற அணிகள் வலியுறுத்தியுள்ளன.
 

Follow Us:
Download App:
  • android
  • ios