ஐபிஎல் 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த சீசனில் ஐந்தாவது முறையாக டைட்டிலை வென்று சாதனை படைத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

இந்த சீசனில் இளம் வீரர்கள் அபாரமாக ஆடினர். தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இளம் வீரர்கள் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தை ஈர்த்ததுடன் பாராட்டையும் பெற்றனர். ராகுல், தவான், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகிய வீரர்களும் மிகச்சிறப்பாக ஆடினர்.

இந்நிலையில், இந்த சீசனில் அசத்திய சிறந்த 11 வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார் ஹர்ஷா போக்ளே. தொடக்க வீரர்களாக, இந்த சீசனின் டாப் 2 ஸ்கோரர்களான ராகுல் மற்றும் தவான் ஆகிய இருவரையும் தேர்வு செய்த ஹர்ஷா போக்ளே, மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வரிசைகளில் முறையே சூர்யகுமார் யாதவ், டிவில்லியர்ஸ் மற்றும் பொல்லார்டு ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார். ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவையும் ஸ்பின்னர்களாக ரஷீத் கான் மற்றும் சாஹல் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார்.

ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஷமி மற்றும் ஆர்ச்சர் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார். இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை(29) வீழ்த்தி, டெல்லி கேபிடள்ஸ் அணி முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேற காரணமாக இருந்த ரபாடாவை தனது அணியில் எடுக்கவில்லை.

ஹர்ஷா போக்ளே தேர்வு செய்த ஐபிஎல் 2020ன் சிறந்த லெவன்:

கேஎல் ராகுல், தவான், சூர்யகுமார் யாதவ், டிவில்லியர்ஸ், பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, ஆர்ச்சர், ரஷீத் கான், பும்ரா, முகமது ஷமி, சாஹல்.