ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி இந்த சீசனில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றிலும் மிகச்சிறந்த பரபரப்பான போட்டியாக அமைந்தது. 

காயம் காரணமாக ரோஹித் சர்மா ஆடாததால் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொல்லார்டு செயல்பட்டார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி, 197 ரன்களை குவித்தது. 198 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் பொல்லார்டு தனி ஒருவனாக களத்தில் நின்று அதிரடியாக ஆடி 31 பந்துகளில் 83 ரன்களை குவித்து மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெற செய்தார். இந்த வெற்றியின் மூலம் 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 

இந்த போட்டி முழுவதுமே மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இருந்தது. கெய்லின் அதிரடி, ராகுலின் சதம், பொல்லார்டின் மிரட்டலான பேட்டிங் என போட்டி முடியும் வரை பரபரப்பாகவே இருந்தது. 

இந்த போட்டி ஹர்திக் பாண்டியாவிற்கு சரியாக அமையவில்லை. 4 ஓவர்கள் வீசி 57 ரன்களை விட்டுக்கொடுத்த ஹர்திக் பாண்டியா, பேட்டிங்கிலும் வெறும் 19 ரன்கள் மட்டுமே அடித்தார். ஹர்திக் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது, பஞ்சாப் வீரர் ஹார்டஸ் வில்ஜோயனும்  ஹர்திக்கும் நேருக்குநேர் நின்று முறைத்து கொண்டனர். பின்னர் நமுட்டு சிரிப்புடன் நகர்ந்து சென்றனர். இது சீரியஸான சண்டையாக இல்லை. இருவரும் ஜாலியாக முறைத்துக்கொண்டதாகவே இருந்தது. அந்த வீடியோ இதோ..