ஐபிஎல்லில் ஆர்சிபி அணி எப்போதுமே பிளே ஆஃபிற்கே தகுதி இல்லாத அணி என்று கவுதம் கம்பீர் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதுவரை ஐபிஎல்லில் ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி அணி, வழக்கம்போலவே இந்த சீசனிலாவது முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியது. ஆனால் இந்த சீசனிலும் வழக்கம்போலவே சொதப்பி எலிமினேட்டருடன் வெளியேறியது.

எலிமினேட்டரில் சன்ரைசர்ஸை எதிர்கொண்ட ஆர்சிபி அணி, 131 ரன்கள் மட்டுமே அடித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது சன்ரைசர்ஸ் அணி. இந்த சீசனில் ஆர்சிபி அணியின் பவுலிங் நன்றாக இருந்தது. ஆனால் கோலியும் டிவில்லியர்ஸும் இந்த சீசனில் பெரிதாக ஜொலிக்காததால் பேட்டிங்கில் சொதப்பியதால் தான் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

ஆர்சிபி அணியையும் கேப்டன் கோலியையும் எப்போதுமே அட்டாக் செய்யும் கம்பீர், இப்போதும் அதை செய்துள்ளார். ஆர்சிபி மீது எப்போதுமே நல்ல அபிப்ராயம் இல்லாத கம்பீர், ஆர்சிபி பிளே ஆஃபிற்கு முன்னேறவே தகுதியில்லாத அணி என்று விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய கம்பீர், ஆர்சிபி எப்போதுமே பிளே ஆஃபிற்கு முன்னேற தகுதியில்லாத அணி. ஆர்சிபியின் கடைசி 4-5 போட்டிகளை பாருங்கள்.. மும்பை இந்தியன்ஸுக்கு எதிராகக்கூட சூப்பர் ஓவரில் தான் வென்றது.. அதுவும் நவ்தீப் சைனியின் நல்ல பவுலிங்கால் அதுவும் சாத்தியமானது.  இந்த சீசனில் அவரைத்தவிர வேறு எதுவுமே ஆர்சிபிக்கு சரியாக அமையவில்லை என்றார்.

ஆர்சிபி அணி இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக சூப்பர் ஓவரில் வென்றது. நூலிழையில் அதிர்ஷ்டத்தால் வென்ற ஆர்சிபி அணி, சன்ரைசர்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் தோற்கவேண்டிய ஆர்சிபி அணி, சன்ரைசர்ஸ் வீரர் மிட்செல் மார்ஷ் காயத்தால் பேட்டிங் ஆட முடியாமல் போனதால் தான் ஜெயித்தது. அந்த 2 போட்டியிலுமே ஆர்சிபி தோற்றிருக்க வேண்டியது. அப்படி 2 அதிர்ஷ்ட வெற்றியை பெற்றும் கூட, கடைசியில் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் தான் கேகேஆரை பின்னுக்குத்தள்ளி பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றது ஆர்சிபி.