ஐபிஎல் 13வது சீசனின் இறுதி போட்டியில் வலுவான, சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது டெல்லி கேபிடள்ஸ் அணி. மும்பை அணி பேட்டிங், பவுலிங் என அனைத்திலுமே வலுவாக திகழும் மும்பை இந்தியன்ஸை வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல.

டெல்லி கேபிடள்ஸ் அணி முதல் முறையாக இந்த சீசனில் தான் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது டெல்லி கேபிடள்ஸ் அணி. ஆனால் மும்பையை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

ரோஹித், டி காக், இஷான் கிஷன், சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு என வலுவான பேட்டிங் ஆர்டரையும், பும்ரா, போல்ட் என உலகின் 2 தலைசிறந்த ஃபாஸ்ட் பவுலர்களையும் கொண்ட வலுவான அணி மும்பை.

இந்நிலையில், மும்பையை வீழ்த்த டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு கம்பீர் ஆலோசனை கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய கம்பீர், மும்பை இந்தியன்ஸ் அணியை 150-160 ரன்களுக்கு கட்டுப்படுத்தினால் மட்டுமே டெல்லி அணியால் வெற்றி பெற முடியும். டெல்லி அணியிடம் அதற்கான பவுலிங் யூனிட் உள்ளது. மும்பை அணி 180 ரன்கள் அடித்துவிட்டால், எந்த எதிரணிக்குமே மும்பையை வீழ்த்துவது கடினம். பென் ஸ்டோக்ஸின் அபாரமான பேட்டிங்கால், மும்பை அணி 190 ரன்களுக்கு மேல் அடித்த இலக்கை ராஜஸ்தானால் அடித்து வெற்றி பெற முடிந்ததே தவிர, மற்றபடி, மும்பை 190 ரன்கள் அடித்தால் எந்த அணியாலும் வீழ்த்த முடியாது என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.