Asianet News TamilAsianet News Tamil

சிங்கம் மாதிரி இருந்த மனுஷன இன்றைக்கு ச்சீப்பா நடத்திட்டாங்களே.. யுவராஜ் சிங்கிற்காக வேதனைப்பட்ட காம்பீர்

கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என கடந்த சீசன் வரை 5 அணிகளுக்காக ஆடிய யுவராஜ் சிங்கை, இந்த சீசனிற்கு எந்த அணியும் எடுக்க முன்வராத நிலையில், இரண்டாம் கட்ட ஏலத்தில் யுவராஜ் சிங்கை மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. 

gambhir feels yuvraj singh was insulted in ipl 2019 auction
Author
India, First Published Apr 20, 2019, 12:10 PM IST

இந்திய அணியில் கடந்த 2000ம் ஆண்டிலிருந்து ஆடிவரும் யுவராஜ் சிங், 2003, 2007, 2011 ஆகிய 3 ஒருநாள் உலக கோப்பை தொடர்களில் யுவராஜ் சிங் ஆடியுள்ளார். 2011 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். அந்த உலக கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதையும் யுவராஜ் தான் வென்றார். 2011 உலக கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே யுவராஜின் பங்களிப்பு அளப்பரியது. 

அதேபோல ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி அரிய சாதனையை நிகழ்த்திய யுவராஜ் சிங், 2007ல் டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றபோதும் முக்கிய பங்காற்றினார். இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்காற்றியுள்ள யுவராஜ் சிங், கடந்த ஒன்றரை ஆண்டாக இந்திய அணியில் ஆடவில்லை. 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் யுவராஜ் ஆடியதுதான் கடைசி. அதன்பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. 

gambhir feels yuvraj singh was insulted in ipl 2019 auction

இந்திய அணியின் மாபெரும் சக்தியாக யுவராஜ் சிங் திகழ்ந்த காலத்தில் அதிகமான தொகைக்கு ஏலம்போன அவரை, நடப்பு சீசனில் அடிப்படை விலைக்குக்கூட எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இரண்டாம் கட்ட ஏலத்தில் யுவராஜின் அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. 

கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என கடந்த சீசன் வரை 5 அணிகளுக்காக ஆடிய யுவராஜ் சிங்கை, இந்த சீசனிற்கு எந்த அணியும் எடுக்க முன்வராத நிலையில், இரண்டாம் கட்ட ஏலத்தில் யுவராஜ் சிங்கை மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. 

இந்த சீசனில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் களமிறங்கிய யுவராஜ் சிங், தொடக்கத்தில் சில போட்டிகளில் களமிறங்கி ஓரளவிற்கு ஆடினார். அதன்பின்னர் ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. இஷான் கிஷான் களமிறக்கப்பட்டு வருகிறார். 

gambhir feels yuvraj singh was insulted in ipl 2019 auction

இந்நிலையில், யுவராஜ் சிங் குறித்து பேசியுள்ள கவுதம் காம்பீர், ஐபிஎல்லில் யுவராஜ் சிங்கிற்கு சரியான மரியாதை வழங்கப்படவில்லை, அவருக்கான பணமும் வழங்கப்படவில்லை என்று காம்பீர் வேதனை தெரிவித்துள்ளார். 

யுவராஜ் சிங்கை முதல் கட்ட ஏலத்தில் எந்த அணியும் எடுக்காததையும், இரண்டாம் கட்ட ஏலத்தில் அவர் வெறும் ஒரு கோடிக்கு ஏலம் போனதையும் தாங்க முடியாமல் காம்பீர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதனால் தான் யுவராஜ் சிங், 2019 ஐபிஎல் ஏலத்தில் அசிங்கப்படுத்தப்பட்டதாக காம்பீர் கருதுகிறார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios